» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அம்மா உணவகங்களைப் புதுப்பிக்க முதல்வர் உத்தரவு: நகராட்சி பொது நிதியைப் பயன்படுத்த அனுமதி!
திங்கள் 18, மே 2026 8:20:54 PM (IST)
தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, தரமான உணவுகளை வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போது பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் 383 அம்மா உணவகங்களும், பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் மூலமாக 237 அம்மா உணவகங்களும் என மொத்தம் 620 உணவகங்கள் ஏழை எளிய மக்களின் பயன்பாட்டிற்காகச் செயல்பட்டு வருகின்றன.சமீப காலங்களாக இந்த உணவகங்களில் விநியோகிக்கப்படும் உணவு வகைகளின் தரம் மற்றும் சுவை திருப்திகரமாக இல்லை என்றும், போதிய உள்கட்டமைப்பு மற்றும் சமையல் உபகரணங்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும் முதலமைச்சர் விஜய்யின் கவனத்திற்குத் தகவல்கள் கொண்டு செல்லப்பட்டன. இதனைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் உரிய அரசுத் துறைச் செயலாளர்களுடன் முதலமைச்சர் இன்று அவசரக் கலந்தாலோசனை மேற்கொண்டார்.
ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், அம்மா உணவகங்களை முழுமையாகப் புதுப்பிக்கப் பின்வரும் அதிரடி உத்தரவுகளை முதலமைச்சர் விஜய் பிறப்பித்துள்ளார்: அம்மா உணவகங்களுக்குத் தேவைப்படும் அத்தியாவசிய உள்கட்டமைப்பு வசதிகளை உடனடியாக மேம்படுத்த வேண்டும்.
பழுதடைந்த சமையல் உபகரணங்களை மாற்றி, புதிய நவீன உபகரணங்களை போர்க்கால அடிப்படையில் கொள்முதல் செய்ய வேண்டும். எளிய மக்களுக்குச் சுவையுடனும், தூய்மையுடனும் கூடிய தரமான உணவு வகைகள் தங்குதடையின்றிக் கிடைப்பதை அதிகாரிகள் தினசரி உறுதி செய்ய வேண்டும்.
இந்த மறுசீரமைப்புப் பணிகள் மற்றும் புதிய பொருட்கள் கொள்முதலுக்கான செலவினங்களை, அந்தந்த மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் 'பொது நிதியிலிருந்து' நேரடியாக மேற்கொள்வதற்கும் முதலமைச்சர் விஜய் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.
புதிய அரசு பொறுப்பேற்ற சில நாட்களிலேயே, எளிய மக்களின் அடிப்படைத் தேவையான உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், முந்தைய அரசின் இந்த மக்கள் நலத் திட்டத்தை மறுசீரமைக்க முதலமைச்சர் விஜய் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாட்டில் 17 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு
திங்கள் 18, மே 2026 5:51:18 PM (IST)

தவெக ஆட்சியின் உண்மை முகம் போகப் போக வெளிவரும்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
திங்கள் 18, மே 2026 5:13:06 PM (IST)

கோடை விடுமுறைக்குப்பின் ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பு - அமைச்சர் ராஜ் மோகன் அறிவிப்பு!
திங்கள் 18, மே 2026 5:05:02 PM (IST)

ரேஷன் கடை பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு: நள்ளிரவில் மர்ம நபர்கள் கைவரிசை!
திங்கள் 18, மே 2026 4:18:18 PM (IST)

மே 20-ல் வெளியாகிறது 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: இணையதளங்களில் பார்க்கும் வழிமுறைகள்
திங்கள் 18, மே 2026 12:53:24 PM (IST)

மே 21-ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
திங்கள் 18, மே 2026 11:16:08 AM (IST)


