» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்செந்தூர் கோவிலில் ஆய்வு : அமைச்சர் ரமேஷுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ கண்டனம்!
சனி 30, மே 2026 12:09:48 PM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் புகழைச் சிறுமைப்படுத்தியதாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷுக்கு திமுக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "திருச்செந்தூர் கோயிலில் ஆய்வு என்ற பெயரில் அமைச்சர் ரமேஷ் அங்குள்ள அர்ச்சகர்களை மிகக் கேவலமாக இழிவுபடுத்தியுள்ளார். மேலும், பல தலைமுறைகளாக பாரம்பரிய முறைப்படி ஆன்மிகப் பணியாற்றி வரும் திரிசுதந்திர அர்ச்சகர் சமுதாயத்தையும் அவர் கடுமையாக அவமதித்துள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் எவ்வித சிரமமுமின்றி சுவாமி தரிசனம் செய்வதற்கு இந்த அர்ச்சகர்கள் தங்களது முழுமையான உதவிகளைச் செய்து வருகின்றனர். குறிப்பாக, இந்து சமய அறநிலையத்துறையைச் சாராத திரிசுதந்திர அர்ச்சகர்கள், பாரம்பரிய மரபு வழியாகக் கோயில் வழிபாட்டு முறைகளிலும் பக்தர்களுக்கு வழிகாட்டுவதிலும் தங்களை அர்ப்பணித்து உதவி வருகிறார்கள்." என்று அனிதா ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
ராஜாமே 30, 2026 - 12:29:04 PM | Posted IP 162.1*****
கல்குவாரி போச்சு. உள்ளூர் கொள்ளை போச்சு இனி என்ன ஆச்சு
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் கோயில் சிறப்பு நிரந்தர தபால் முத்திரை : அஞ்சல்துறை சார்பில் வெளியீடு
சனி 30, மே 2026 5:31:15 PM (IST)

வட மாநிலத்தவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கல் - அமைச்சர் மரிய வில்சன் தகவல்!
சனி 30, மே 2026 4:21:11 PM (IST)

ஜூன் 1 முதல் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை: குமரி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி!
சனி 30, மே 2026 4:02:42 PM (IST)

எம்எல்ஏக்களை விலைபேசும் தவெக: குதிரை பேரத்தை தடுக்க ஆளுநரிடம் அதிமுக அவசர மனு!
சனி 30, மே 2026 3:46:21 PM (IST)

நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி மறைவு : முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல்
சனி 30, மே 2026 11:57:20 AM (IST)

கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல அனுமதி : அனிதா கருத்துக்கு மனோ தங்கராஜ் எதிர்ப்பு!
சனி 30, மே 2026 11:33:26 AM (IST)



இதுவரை உங்களுக்கு ஓட்டு போட்ட ஒருவன்மே 30, 2026 - 06:01:22 PM | Posted IP 104.2*****