» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்செந்தூர் கோயில் சிறப்பு நிரந்தர தபால் முத்திரை : அஞ்சல்துறை சார்பில் வெளியீடு
சனி 30, மே 2026 5:31:15 PM (IST)
இந்திய அஞ்சல்துறை சார்பில், வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் கோயிலுக்கு சிறப்பு நிரந்தர தபால் முத்திரை வெளியிடப்பட்டது.
இந்திய அஞ்சல் துறை சார்பில் கலாச்சார, வரலாற்று மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை சிறப்பிக்கும் வகையில் நிரந்தர சித்திர அஞ்சல் முத்திரை வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு மிக்க அஞ்சல் முத்திரை அறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு கடந்த 1978-ல் தமிழ்நாடு அஞ்சல் வட்டம் வெளியிட்டது.
முருகப்பெருமானின் மீதமுள்ள 5 படை வீடு கோயில்களுக்கு நேற்று அஞ்சல் முத்திரை வெளியிடப்பட்டது. இதில், அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சிறப்பு நிரந்தர அஞ்சல் முத்திரை வைகாசி விசாக திருவிழாவான இன்று வெளியிடப்பட்டது. திருச்செந்தூர் தலைமை தபால் அலுவலகத்தில் நடந்த விழாவில் திருச்செந்தூர் அஞ்சல் உப கோட்ட கண்காணிப்பாளர் ஷண்முக ப்ரியா வரவேற்றார்.
விழாவில், தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், திருச்செந்தூர் கோயிலுக்கான சிறப்பு முத்திரையை வெளியிட்டார். தலைமை அஞ்சலக அதிகாரி ரவிமோகன் நன்றி கூறினார். இதில், அஞ்சல் தலை சேமிப்பு ஆர்வலர்கள், பொதுமக்கள், அஞ்சலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வட மாநிலத்தவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கல் - அமைச்சர் மரிய வில்சன் தகவல்!
சனி 30, மே 2026 4:21:11 PM (IST)

ஜூன் 1 முதல் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை: குமரி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி!
சனி 30, மே 2026 4:02:42 PM (IST)

எம்எல்ஏக்களை விலைபேசும் தவெக: குதிரை பேரத்தை தடுக்க ஆளுநரிடம் அதிமுக அவசர மனு!
சனி 30, மே 2026 3:46:21 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் ஆய்வு : அமைச்சர் ரமேஷுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ கண்டனம்!
சனி 30, மே 2026 12:09:48 PM (IST)

நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி மறைவு : முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல்
சனி 30, மே 2026 11:57:20 AM (IST)

கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல அனுமதி : அனிதா கருத்துக்கு மனோ தங்கராஜ் எதிர்ப்பு!
சனி 30, மே 2026 11:33:26 AM (IST)



Murugan adimaiமே 30, 2026 - 06:07:26 PM | Posted IP 172.7*****