» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இன்ஸ்டாகிராமில் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்தரித்து வெளியிட்ட வாலிபர் கைது!
ஞாயிறு 31, மே 2026 9:22:28 AM (IST)
சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்தரித்து வெளியிட்ட வழக்கில், கோவில்பட்டியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரைப் போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர், ரயில்வே பீடர் சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் காந்தி மகன் சூரிய சாரத் (26). இவருக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் சமூக வலைதளப் பக்கத்தில், பெண்களின் புகைப்படங்களை அவர்களின் அனுமதியின்றி எடுத்து, அதனை ஆபாசமான முறையில் கணினியில் சித்தரித்து தொடர்ந்து வெளியிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
பெண்களின் கண்ணியத்திற்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து ஆபாசப் புகைப்படங்கள் வெளியாவது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில், நாலாட்டின்புதூர் போலீஸார் தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் பெண்களைத் தவறாகச் சித்தரித்தல் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து, தலைமறைவாக இருக்க முயன்ற சூரிய சாரத்தை நேற்று சனிக்கிழமை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: 5 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!
ஞாயிறு 31, மே 2026 10:35:20 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிரடி: 17 காவல் உதவி ஆய்வாளர்கள் உட்பட 31 பேர் பணியிட மாற்றம்!
ஞாயிறு 31, மே 2026 9:29:04 AM (IST)

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு : ஜவாஹிருல்லா எம்எல்ஏ குற்றச்சாட்டு!
ஞாயிறு 31, மே 2026 9:01:43 AM (IST)

திருச்செந்தூர் கோயில் சிறப்பு நிரந்தர தபால் முத்திரை : அஞ்சல்துறை சார்பில் வெளியீடு
சனி 30, மே 2026 5:31:15 PM (IST)

வட மாநிலத்தவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கல் - அமைச்சர் மரிய வில்சன் தகவல்!
சனி 30, மே 2026 4:21:11 PM (IST)

ஜூன் 1 முதல் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை: குமரி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி!
சனி 30, மே 2026 4:02:42 PM (IST)


