» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி 1-ஆம் கேட் பள்ளத்தை உடனே சீரமைக்க வேண்டும்: மத்திய அரசு வழக்கறிஞர் வலியுறுத்தல்!
திங்கள் 1, ஜூன் 2026 4:04:38 PM (IST)

தூத்துக்குடி ரயில் நிலையம் 1-ஆம் கேட் முன்பு பாதாள சாக்கடைப் பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தை மூடி, சாலையை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என்று மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞர் இசக்கி செல்வ லட்சுமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மாநகராட்சி ஆணையருக்குப் அனுப்பியுள்ள மனுவில், "தூத்துக்குடி ரயில் நிலையம் 1-ஆம் கேட் முன்பு மாநகராட்சி பாதாள சாக்கடைத் திட்டத்திற்காகப் பல மாதங்களுக்கு முன்பு பெரிய பள்ளம் தோண்டப்பட்டது. பணிகள் முடிந்த பின்னரும் இன்று வரை இப்பள்ளம் மூடப்படாமல் உள்ளதால், கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இப்பகுதியில் 1 மற்றும் 2-ஆம் ரயில்வே கேட்டுகள் மணிக்கு இருமுறை மூடப்படுவதால், பொதுமக்கள் பஜார் மற்றும் முனிசிபல் பகுதிகளுக்குச் செல்ல புதிய பேருந்து நிலைய மேம்பாலம் அல்லது கடற்கரைச் சாலை வழியாகப் பல கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. இந்த இரண்டு கேட் பகுதிகளையும் சுற்றி ஏராளமான ஆரம்ப, நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் அமைந்துள்ளன. இன்னும் இரண்டு நாட்களில் கோடைகால விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
பள்ளி மாணவ, மாணவிகளின் பயண சிரமத்தையும், பொதுமக்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, ரயில்வே 1-ஆம் கேட் முன்பு ஆபத்தான நிலையில் உள்ள பள்ளத்தை உடனடியாகச் சீர் செய்து, சாலையைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்..
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிங்கப்பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத தவெக ஆட்சி தூய சக்தியா? நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
திங்கள் 1, ஜூன் 2026 5:54:36 PM (IST)

ஊழல், லஞ்சமில்லாத ஆட்சியை வழங்குவேன்: திருச்சியில் முதல்வர் ஜோசப் விஜய் பேச்சு!
திங்கள் 1, ஜூன் 2026 5:40:35 PM (IST)

முதல்வர் விஜய்யை வரவேற்றது ஏன்? துரை வைகோ விளக்கம் - கூட்டணி குறித்து ஜூன் 27ல் முடிவு!
திங்கள் 1, ஜூன் 2026 5:29:35 PM (IST)

நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
திங்கள் 1, ஜூன் 2026 5:18:18 PM (IST)

தாயுமானவர் திட்டத்தை தொடர தவெக அரசு முடிவு: நாளை முதல் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்!
திங்கள் 1, ஜூன் 2026 4:58:34 PM (IST)

செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக 5 பெட்டிகள் இணைப்பு: ஜூன் 15 முதல் அமல்!
திங்கள் 1, ஜூன் 2026 3:54:22 PM (IST)


