» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தாயுமானவர் திட்டத்தை தொடர தவெக அரசு முடிவு: நாளை முதல் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்!
திங்கள் 1, ஜூன் 2026 4:58:34 PM (IST)

தமிழகத்தில் 'தாயுமானவர் திட்டம்' நிறுத்தப்பட்டுவிட்டதாகப் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஜூன் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
வயோதிகம் மற்றும் உடல்நிலை பாதிப்பால் நியாயவிலைக் கடைகளுக்கு நேரில் சென்று ரேஷன் பொருட்களைப் பெற முடியாத 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக முதலமைச்சரின் 'தாயுமானவர் திட்டம்' தொடங்கப்பட்டுச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஜூன் மாதத்திற்கான விநியோகம் நாளை (ஜூன் 2) மற்றும் அதற்கு அடுத்த நாள் (ஜூன் 3) ஆகிய தேதிகளில் சென்னையின் 18 மண்டலங்களில் (அண்ணாநகர், ஆலந்தூர், அடையாறு, தாம்பரம், திருவொற்றியூர், கோடம்பாக்கம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகள்) நடைபெற உள்ளது.
இந்த 18 மண்டலங்களில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் 990 நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்கள், பயனாளிகளின் இல்லத்திற்கே நேரடியாகச் சென்று அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் (சென்னை மண்டலம்) பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் முதியோர்களும் மாற்றுத்திறனாளிகளும் இந்த வாய்ப்பைத் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிங்கப்பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத தவெக ஆட்சி தூய சக்தியா? நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
திங்கள் 1, ஜூன் 2026 5:54:36 PM (IST)

ஊழல், லஞ்சமில்லாத ஆட்சியை வழங்குவேன்: திருச்சியில் முதல்வர் ஜோசப் விஜய் பேச்சு!
திங்கள் 1, ஜூன் 2026 5:40:35 PM (IST)

முதல்வர் விஜய்யை வரவேற்றது ஏன்? துரை வைகோ விளக்கம் - கூட்டணி குறித்து ஜூன் 27ல் முடிவு!
திங்கள் 1, ஜூன் 2026 5:29:35 PM (IST)

நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
திங்கள் 1, ஜூன் 2026 5:18:18 PM (IST)

தூத்துக்குடி 1-ஆம் கேட் பள்ளத்தை உடனே சீரமைக்க வேண்டும்: மத்திய அரசு வழக்கறிஞர் வலியுறுத்தல்!
திங்கள் 1, ஜூன் 2026 4:04:38 PM (IST)

செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக 5 பெட்டிகள் இணைப்பு: ஜூன் 15 முதல் அமல்!
திங்கள் 1, ஜூன் 2026 3:54:22 PM (IST)


