» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சிங்கப்பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத தவெக ஆட்சி தூய சக்தியா? நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
திங்கள் 1, ஜூன் 2026 5:54:36 PM (IST)
சிங்கப்பெண்ணுக்கே பாதுகாப்பை உறுதி செய்யும் திறனற்ற ஆட்சி தான் தூய சக்தியா? என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்து உள்ளார்.
ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவல் ஆய்வாளர் மீது, சிங்கப் பெண் அதிரடிப்படையில் இடம்பெற்றுள்ள பெண்காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்று கொண்ட தவெக அரசு, பெண்களின் பாதுகாப்பிற்காக சிங்கப்பெண் படையை அமைத்து உள்ளது. ஆனால் அந்த சிறப்பு படையில் இடம்பெற்றுள்ள பெண் போலீசுக்கே பாதுகாப்பில்லை என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சாடி உள்ளார்.
இது தொடர்பான அறிக்கையில் அவர் கூறி இருப்பதாவது, தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில், சிங்கப்பெண் அதிரடிப்படையிலுள்ள பெண் காவலருக்கு காவல் ஆய்வாளர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்துள்ள புகார் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தொடங்கப்பட்ட திட்டத்தின் கீழ் காக்கி சட்டை அணிந்த பெண்ணுக்கே பாதுகாப்பை உறுதி செய்யும் திறனற்ற ஆட்சி தான் தூய சக்தியா? என்று கேள்வி எழுப்பி இது என்ன ஒரு வெட்கக்கேடு என கடுமையாக விமர்சித்து உள்ளார்.
"நான் உங்கள் அண்ணன்" என மேடைக்கு மேடை முழங்கும் முதல்வர் விஜய் அவர்கள், முதலில் இந்த புகாரைத் தீர விசாரித்து, குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விளம்பரத் திட்டங்களை அறிமுகம் செய்வதோடு நில்லாது, தமிழகப் பெண்களுக்கான பாதுகாப்பை உண்மையாக உறுதி செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஊழல், லஞ்சமில்லாத ஆட்சியை வழங்குவேன்: திருச்சியில் முதல்வர் ஜோசப் விஜய் பேச்சு!
திங்கள் 1, ஜூன் 2026 5:40:35 PM (IST)

முதல்வர் விஜய்யை வரவேற்றது ஏன்? துரை வைகோ விளக்கம் - கூட்டணி குறித்து ஜூன் 27ல் முடிவு!
திங்கள் 1, ஜூன் 2026 5:29:35 PM (IST)

நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
திங்கள் 1, ஜூன் 2026 5:18:18 PM (IST)

தாயுமானவர் திட்டத்தை தொடர தவெக அரசு முடிவு: நாளை முதல் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்!
திங்கள் 1, ஜூன் 2026 4:58:34 PM (IST)

தூத்துக்குடி 1-ஆம் கேட் பள்ளத்தை உடனே சீரமைக்க வேண்டும்: மத்திய அரசு வழக்கறிஞர் வலியுறுத்தல்!
திங்கள் 1, ஜூன் 2026 4:04:38 PM (IST)

செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக 5 பெட்டிகள் இணைப்பு: ஜூன் 15 முதல் அமல்!
திங்கள் 1, ஜூன் 2026 3:54:22 PM (IST)


