» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மாணவர்களுக்குக் காலை உணவுக்குப் பதில் பிஸ்கட் விநியோகம்: 3 பேர் பணிநீக்கம்!
திங்கள் 22, ஜூன் 2026 8:17:10 PM (IST)
விளாத்திகுளம் ஒன்றியத் துவக்கப்பள்ளி மாணவர்களுக்குக் காலை உணவுக்குப் பதிலாக பிஸ்கட் வழங்கப்பட்ட புகாரில், பணியாளர்கள் மூவர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஒன்றியத் துவக்கப்பள்ளியில் மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தில் முறைகேடு மற்றும் பற்றாக்குறை நிலவுவதாகப் புகார் எழுந்தது. இப்புகார் தொடர்பாகத் தொடக்கப்பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் நேரடியாகப் பள்ளிக்குச் சென்று தீவிர விசாரணை நடத்தினார்.
விசாரணையில், புதிய மாணவர் சேர்க்கை நடைபெற்றதற்குப் பின், அதற்கேற்ப உணவுப் பொருட்களுக்கான திருத்தப்பட்ட தேவைப் பட்டியலை மகளிர் சுயஉதவிக் குழுவினர் முறையாகச் சமர்ப்பிக்கவில்லை என்பது தெரியவந்தது. இதன் காரணமாகவே மாணவர்களுக்குக் காலை உணவு பற்றாக்குறை ஏற்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து, மகளிர் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த காலை உணவுத் திட்ட கணக்காளர், சமையலர் மற்றும் உதவியாளர் ஆகிய மூவரையும் பணியில் இருந்து நீக்க அதிகாரிகள் பரிந்துரை செய்தனர். அதன்படி, மகளிர் சுயஉதவிக் குழு கூட்டத்தில் அவசரத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவர்கள் மூவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து உரிய விளக்கம் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியைக்குக் கல்வித்துறை அதிகாரிகள் குறிப்பாணை (மெமோ) வழங்கியுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சட்டப்பேரவையை சினிமா தியேட்டராக மாற்றிவிட்டனர் : உதயநிதி ஸ்டாலின் கடும் சாடல்!
செவ்வாய் 23, ஜூன் 2026 12:09:05 PM (IST)

சட்டம் - ஒழுங்குப் பிரச்னைகளை ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்தியிருக்கலாமே: முதல்வர் விஜய் கேள்வி!
செவ்வாய் 23, ஜூன் 2026 12:01:39 PM (IST)

திருச்செந்தூர் கோயில் கட்டண உயர்வு அறிவிப்பு : ஜூலை 7-க்குள் ஆட்சேபனைகளைத் தெரிவிக்கலாம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 10:50:50 AM (IST)

குழந்தைகளின் சமூக வலைத்தளப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த சட்டம்: முதலமைச்சருக்குக் கோவில்பட்டி எழுத்தாளர் மனு!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:25:47 AM (IST)

ஓடும் பேருந்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது!
செவ்வாய் 23, ஜூன் 2026 7:37:24 AM (IST)

கட்டாரிமங்கலம் அழகியகூத்தர் கோயிலில் ஆனி உத்திரத் திருவிழா: பன்னிரு திருமுறை விண்ணப்பம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 7:29:59 AM (IST)


