» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் ஜூன் 28இல் மாவட்ட அளவிலான செஸ் போட்டி: ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

வெள்ளி 26, ஜூன் 2026 9:02:12 AM (IST)

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டிகள் வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) நடைபெறவுள்ளன. 

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட சதுரங்கக் கழகச் செயலாளர் கற்பகவல்லி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சதுரங்க வீரர் மற்றும் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில், தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் இந்த மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இப்போட்டிகள் 9, 11, 13, 17 வயதுக்குட்பட்டோர் பிரிவுகள் மற்றும் பொதுப்பிரிவு எனத் தனித்தனியாக நடைபெறுகின்றன.

விண்ணப்பிக்கும் முறை: போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் easypaychess.com என்ற இணையதளம் மூலமாக நுழைவுக் கட்டணத்தைச் செலுத்தித் தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், தூத்துக்குடி மாவட்ட சதுரங்கக் கழகத்திற்குச் செலுத்த வேண்டிய மாவட்டப் பதிவுக்கட்டணம் ரூ. 75-ஐயும் இதே இணையதளத்தில் செலுத்திப் பதிவு எண்ணைப் பெற்றிருக்க வேண்டும்.

போட்டியில் பங்கேற்கும் மாண்வ, மாணவிகள் தங்களது பிறப்புச் சான்றிதழ் நகல் அல்லது அடையாள அட்டை நகலைக் கண்டிப்பாகக் கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் சிறந்து விளங்கும் மாணவ - மாணவிகளுக்குத் தலா 10 பரிசுகள் வீதம் வழங்கப்படும். இப்போட்டிக்கான ஏற்பாடுகளைத் தூத்துக்குடி மாவட்ட சதுரங்கக் கழகம் மற்றும் காமராஜ் கல்லூரி நிர்வாகம் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory