» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நாடு முழுவதும் சமமான கல்வி வழங்க ராகுல் காந்தி புதிய இயக்கம்: காங்கிரஸ் தலைவர் பேட்டி
சனி 27, ஜூன் 2026 11:31:14 AM (IST)

மத்திய பாஜக அரசின் கல்விக் கொள்கைகள் மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி வருவதாக தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சகாயராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சகாயராஜ் கூறியதாவது: இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் உள்ளது என்பது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் உறுதியான நிலைப்பாடாகும். ஆனால், தற்போதைய மத்திய பாஜக அரசின் கல்விக் கொள்கைகள் மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி வருகின்றன. குறிப்பாக நீட்உள்ளிட்ட போட்டித் தேர்வுகள் தொடர்பான குழப்பங்கள் மற்றும் தேர்வுகள் தள்ளிப்போவதால் மாணவர்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
கல்வி அனைவருக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் காமராஜர் தமிழகத்தில் கல்விப் புரட்சியை ஏற்படுத்தினார். அதேபோன்று நாடு முழுவதும் மாணவர்கள் அனைவருக்கும் ஒரே தரத்திலான, ஒரே சீரான கல்வி வழங்கப்பட வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் முக்கிய கொள்கையாகும். இந்த நோக்கத்தை வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ‘மாணவர்களின் குரல்’ என்ற புதிய இயக்கத்தைத் தொடங்கி வைத்துள்ளார். மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் தரமான மற்றும் சமமான கல்வி கிடைக்க அவர் மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
தற்போது உயர்கல்வி மற்றும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற மாணவர்கள் தனியார் பயிற்சி மையங்களை நாட வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. இது கல்வி அமைப்பில் உள்ள குறைபாடுகளை வெளிப்படுத்துகிறது. இந்தியா முழுவதும் அனைத்து மாணவர்களுக்கும் சமமான வாய்ப்புகளுடன் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடாகும்.
இந்த கொள்கையை மக்களிடையே எடுத்துச் செல்லும் வகையில், காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு மராத்தான் போட்டி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். பேட்டியின் போது தெற்கு மண்டல தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், சமூக ஊடக பிரிவு மாவட்டத் தலைவர் ஜான் சாமுவேல், மகளிர் அணி ஜெயஜோதி உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு மரியாதையுடன் பாக்யராஜ் இறுதிப் பயணம் : தமிழக முதல்வர் விஜய் அறிவிப்பு!
சனி 27, ஜூன் 2026 12:46:05 PM (IST)

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலக முடிவு: பொதுக்குழு கூட்டத்தைப் புறக்கணித்த 2 எம்எல்ஏக்கள்
சனி 27, ஜூன் 2026 12:40:00 PM (IST)

மாணவர் அடையாள அட்டையில் சாதி, மதம் இடம்பெறக் கூடாது: கீதா ஜீவன் வலியுறுத்தல்!
சனி 27, ஜூன் 2026 12:18:08 PM (IST)

பாக்யராஜ் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு : எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல்!
சனி 27, ஜூன் 2026 10:47:29 AM (IST)

தவெக பெண் நிர்வாகியிடம் செல்போன் பறிப்பு : மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு!
சனி 27, ஜூன் 2026 10:42:16 AM (IST)

திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் மறைவு: அதிர்ச்சியில் உறைந்தது தமிழ்த் திரையுலகம்!
சனி 27, ஜூன் 2026 10:18:09 AM (IST)


