» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசு மரியாதையுடன் பாக்யராஜ் இறுதிப் பயணம் : தமிழக முதல்வர் விஜய் அறிவிப்பு!

சனி 27, ஜூன் 2026 12:46:05 PM (IST)



மறைந்த பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், திரைத்துறையில் அவரது பங்களிப்பைப் போற்றும் வகையில் இறுதிச் சடங்கிற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை விபரம்: "தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா மற்றும் இசையமைப்பாளர் எனப் பன்முகத் திறமையால் முத்திரை பதித்த பாக்யராஜ் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.

தனித்துவமான கதையாக்கம், நகைச்சுவை கலந்த நடிப்பு, கிராமிய வாழ்வியல் மற்றும் குடும்ப உறவுகளின் ஆழமான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த பாக்யராஜ் பங்களிப்பு தமிழ்த் திரைப்பட உலகிற்கு அளப்பரியதாகும். அவரது ஒவ்வொரு படைப்பும் பொழுதுபோக்கோடு, மனிதநேயம் மற்றும் சமூக விழுமியங்களைப் பேசும் காலத்தால் அழியாத நினைவுகளாக என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

பாக்யராஜை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று முதலமைச்சர் விஜய் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அரசு மரியாதை அறிவிப்பு: திரைத்துறையில் பாக்யராஜ் ஆற்றிய சாதனைகளையும் கலைப் பணிகளையும் கௌரவிக்கும் வகையில், அவரது இறுதிப் பயணத்திற்குத் தமிழக அரசின் சார்பில் முழு அரசு மரியாதை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் தனி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory