» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.17 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்: தூத்துக்குடியில் பரபரப்பு!

சனி 11, ஜூலை 2026 8:49:28 AM (IST)

BeeditutyJL11.jpg

தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரைப் பகுதியில் இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.17 லட்சம் மதிப்புள்ள பீடி இலை மூட்டைகள்  மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய சரக்கு வாகனத்தைக் க்யூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தூத்துக்குடி நகர உட்கோட்ட எஸ்பி மேற்பார்வையின் கீழ், தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இனிகோ நகர் கடற்கரைப் பகுதியிலிருந்து கடல் வழியாக இலங்கைக்குப் பீடி இலைகள் கடத்தப்படவுள்ளதாகக் க்யூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதாவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இத் தகவலின் அடிப்படையில், உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், தலைமை காவலர்கள் இருதயராஜகுமார், இசக்கிமுத்து, முதல்நிலை காவலர்கள் பழனி, பாலமுருகன், பேச்சிராஜா ஆகியோர் அடங்கிய போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

ஜூலை 10 நள்ளிரவு 10.30 மணி அளவில், இனிகோ நகர் கடற்கரைக்குத் தென்புறமுள்ள காட்டுப் பகுதியில் போலீசார் அதிரடிச் சோதனை நடத்தினர். அப்போது, இலங்கைக்குப் படகு மூலம் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தலா 30 கிலோ எடை கொண்ட 18 பீடி இலை மூட்டைகளைக் கண்டுபிடித்துக் கைப்பற்றினர். போலீசாரைக் கண்டதும் கடத்தலில் ஈடுபட முயன்ற நபர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். 

கடத்தலுக்குப் பயன்படுத்தத் திட்டமிட்டிருந்த சரக்கு வாகனமும் சம்பவ இடத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட 18 மூடை பீடி இலைகள் மற்றும் சரக்கு வாகனம் ஆகியவை அடுத்தகட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைக்காகச் சுங்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட உள்ளன. தப்பியோடிய கடத்தல் கும்பலைச் சேர்ந்த நபர்களைப் பிடிக்கப் போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory