» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் பைக் விபத்தில் ஷிப்பிங் நிறுவன ஊழியர் பலி; மற்றொருவர் படுகாயம்!

சனி 18, ஜூலை 2026 10:29:05 AM (IST)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் ஷிப்பிங் நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஒருவர் பலத்த காயமடைந்தார்.

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை யாதவர் தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் முத்தமிழரசன் (18). அதே பகுதியைச் சேர்ந்த பூவலிங்கம் என்பவரது மகன் மாரிக்கண்ணன் (18). இவர்கள் இருவரும் தூத்துக்குடிதூத்துக்குடி துறைமுகம் பகுதியில் உள்ள தனியார் ஷிப்பிங் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.

இன்று காலை பணிக்குச் செல்வதற்காக முத்தமிழரசன் மோட்டார் சைக்கிளை ஓட்ட, மாரிக்கண்ணன் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார். தூத்துக்குடி புதிய துறைமுகம் - மதுரை பைபாஸ் சாலையில் உள்ள திருச்செந்தூர் ரோடு ரவுண்டானா அருகே சென்றபோது, பைக் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது. 

இவ்விபத்தில் படுகாயம் அடைந்த முத்தமிழரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாரிக்கண்ணன் பலத்த காயமடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற முத்தையாபுரம் காவல் நிலையப் போலீசார், பாதிக்கப்பட்ட இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

உயிரிழந்த முத்தமிழரசனின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory