» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
2026-27 கல்வியாண்டு பள்ளி நாட்காட்டி வெளியீடு: காலாண்டு, அரையாண்டுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு!
வியாழன் 30, ஜூலை 2026 3:55:20 PM (IST)
2026-2027-ஆம் கல்வியாண்டுக்கான பள்ளி நாட்காட்டியைப் பள்ளிக் கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது. இதில் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் மற்றும் விடுமுறை நாட்கள் குறித்த முழு விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
காலாண்டுத் தேர்வு: செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் செப்டம்பர் 25-ஆம் தேதி வரை நடைபெறும்.
காலாண்டு விடுமுறை: செப்டம்பர் 26-ஆம் தேதி முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரை விடப்படும்.
அரையாண்டுத் தேர்வு: டிசம்பர் 16-ஆம் தேதி முதல் டிசம்பர் 23-ஆம் தேதி வரை நடைபெறும்.
அரையாண்டு விடுமுறை: டிசம்பர் 24-ஆம் தேதி முதல் ஜனவரி 3-ஆம் தேதி வரை விடப்படும்.
பொங்கல் மற்றும் கோடை விடுமுறை:
பொங்கல் விடுமுறை: 2027 ஜனவரி 15-ஆம் தேதி முதல் ஜனவரி 17-ஆம் தேதி வரை பொங்கல் பண்டிகை விடுமுறையாகும்.
கடைசி வேலை நாள்: 2027 ஏப்ரல் 23-ஆம் தேதி இந்த ஆண்டிற்கான கடைசிப் பள்ளி வேலை நாளாக அமையும்.
கோடை விடுமுறை: 2027 ஏப்ரல் 24-ஆம் தேதி முதல் மாணவர்களுக்கான கோடை விடுமுறை தொடங்குகிறது.
அனைத்துப் பள்ளிகளும் இந்த நாட்காட்டியைப் பின்பற்றிச் செயல்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எல் நினோ தாக்கம் - பாதிப்புகளைக் கண்காணிக்க 7 பேர் கொண்ட நிபுணர் குழு: தமிழ்நாடு அரசு உத்தரவு!
வியாழன் 30, ஜூலை 2026 4:25:41 PM (IST)

தூங்கிக் கொண்டிருப்பது யார்? - திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
வியாழன் 30, ஜூலை 2026 3:45:30 PM (IST)

கரூர் அரசுப்பணி உத்தரவு ரத்து: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு!
வியாழன் 30, ஜூலை 2026 12:44:40 PM (IST)

சென்னை மெட்ரோ ரயில் பணிகளை முதலமைச்சர் விஜய் ஆய்வு: விரைந்து முடிக்க உத்தரவு!
வியாழன் 30, ஜூலை 2026 12:16:19 PM (IST)

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!
வியாழன் 30, ஜூலை 2026 12:00:03 PM (IST)

தூத்துக்குடியில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையா? சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை!
வியாழன் 30, ஜூலை 2026 10:12:24 AM (IST)


