» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வகுப்பறையில் வலிப்பு ஏற்பட்டுப் பள்ளி மாணவர் உயிரிழப்பு: தூத்துக்குடியில் சோகம்!
வியாழன் 30, ஜூலை 2026 9:36:54 PM (IST)
தூத்துக்குடியில் பள்ளி வகுப்பறையில் திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி செல்சீனி காலனி 4-வது தெருவைச் சேர்ந்த குருஸ் ராஜா என்பவரது மகன் கார்த்திகேயன் (13). காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இந்த சிறுவன், பிரையண்ட் நகர் 3-வது தெருவில் உள்ள செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப்பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
சிறுவயது முதலே வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டு வந்த கார்த்திகேயனுக்கு, இன்று காலை பள்ளி வகுப்பறையில் இருந்தபோது சுமார் 10 மணி அளவில் திடீரெனக் கடுமையான வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதனைக் கண்ட பள்ளி நிர்வாகத்தினர், உடனடியாக மாணவனின் தாயார் குத்தாலம்மாளுக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த தாயாரும் பள்ளி ஊழியர்களும் சேர்ந்து, கார்த்திகேயனை ஆட்டோ மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். அங்குச் சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தென்பாகம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி வளாகத்தில் மாணவர் உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எல் நினோ தாக்கம் - பாதிப்புகளைக் கண்காணிக்க 7 பேர் கொண்ட நிபுணர் குழு: தமிழ்நாடு அரசு உத்தரவு!
வியாழன் 30, ஜூலை 2026 4:25:41 PM (IST)

2026-27 கல்வியாண்டு பள்ளி நாட்காட்டி வெளியீடு: காலாண்டு, அரையாண்டுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு!
வியாழன் 30, ஜூலை 2026 3:55:20 PM (IST)

தூங்கிக் கொண்டிருப்பது யார்? - திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
வியாழன் 30, ஜூலை 2026 3:45:30 PM (IST)

கரூர் அரசுப்பணி உத்தரவு ரத்து: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு!
வியாழன் 30, ஜூலை 2026 12:44:40 PM (IST)

சென்னை மெட்ரோ ரயில் பணிகளை முதலமைச்சர் விஜய் ஆய்வு: விரைந்து முடிக்க உத்தரவு!
வியாழன் 30, ஜூலை 2026 12:16:19 PM (IST)

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!
வியாழன் 30, ஜூலை 2026 12:00:03 PM (IST)


