» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முத்துநகர் விரைவு ரயிலில் புகையிலைப் பொருட்கள் கடத்தல்: வாலிபர் கைது!

வெள்ளி 31, ஜூலை 2026 5:08:32 PM (IST)

TrainGudka.jpg

சென்னையிலிருந்து தூத்துக்குடி வந்த முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சட்டவிரோதமாகப் போதை புகையிலைப் பொருட்களைக் கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

திருநெல்வேலி இருப்புப்பாதை உட்கோட்ட தனிப்படை உதவி ஆய்வாளர் பெருமாள் தலைமையிலான காவல்துறையினர், இன்று சென்னையில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்த முத்துநகர் விரைவு ரயிலில் விருதுநகர் - தூத்துக்குடி இடையே தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, ரயிலின் பின் பகுதியில் உள்ள பொதுப் பெட்டியில்  சந்தேகத்திற்கிடமான முறையில் பயணம் செய்த நபரின் நீல நிறத் தோள் பையைச் சோதனையிட்டனர். சோதனையில், பைக்குள் சட்டவிரோதமாகப் போதை புகையிலைப் பொருட்கள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து 2.760 கி.கி போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

விசாரணையில், புகையிலைப் பொருட்களைக் கடத்தி வந்தவர் கோவில்பட்டி பசுவந்தனை பாரதி நகரைச் சேர்ந்த மாரியப்பன் மகன் சண்முகராஜ் (31) என்பது தெரியவந்தது. உடனே அவரைப் பிடித்த காவல்துறையினர், பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களுடன் தூத்துக்குடி ரயில்வே காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்து ஒப்படைத்தனர். சோதனையின் போது மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.  இச்சம்பவம் குறித்துச் சார்பு ஆய்வாளர் சண்முகானந்த் விசாரணை மேற்கொண்டு வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory