» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பிரயாக்ராஜ் சிறப்பு இரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்: பயணிகள் கோரிக்கை!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 10:18:11 AM (IST)
பிரயாக்ராஜ் - திருநெல்வேலி சிறப்பு இரயிலைக் கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது..
ஆன்மீகத் தலங்களான பிரயாக்ராஜ் மற்றும் கன்னியாகுமரியை நேரடியாக இணைக்கும் வகையில், தற்போது இயக்கப்பட்டு வரும் பிரயாக்ராஜ் – திருநெல்வேலி வாராந்திர சிறப்பு இரயிலைக் (04171/04172) கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் எனத் தென்னக இரயில்வே நிர்வாகத்திற்கு இரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வட இந்தியாவின் முக்கிய ஆன்மீகத் தலமான பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் அமைந்துள்ளது. அதேபோல், இந்தியாவின் தென் எல்லையான கன்னியாகுமரியில் அரபிக்கடல், வங்காளவிரிகுடா, இந்தியப் பெருங்கடல் ஆகிய மூன்று கடல்கள் சங்கமிக்கின்றன.
இந்த இரண்டு புனிதத் தலங்களுக்கும் இடையே நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரையாகவும், முன்னோர்களுக்குத் திதி மற்றும் பரிகாரச் சடங்குகளைச் செய்யவும் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது வட மத்திய இரயில்வே நிர்வாகத்தால் இயக்கப்படும் பிரயாக்ராஜ் – திருநெல்வேலி வாராந்திர சிறப்பு இரயில், கன்னியாகுமரிக்கு 85 கி.மீ. முன்னதாக திருநெல்வேலியிலேயே நிறுத்தப்படுகிறது. இதனால் கன்னியாகுமரி, நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்குச் செல்லும் பயணிகள், திருநெல்வேலியில் இறங்கி மாற்று இரயில் அல்லது பேருந்துகளைப் பிடித்துச் செல்ல வேண்டிய சிரமத்திற்குத் தள்ளப்படுகின்றனர்.
திங்கள்கிழமைகளில் மதியம் 1:15 மணிக்குத் திருநெல்வேலி வந்தடையும் இந்த இரயில், மீண்டும் இரவு 11:30 மணிக்குத்தான் பிரயாக்ராஜ் நோக்கிப் புறப்படுகிறது. இடைப்பட்ட இந்த 10 மணி நேரத்திற்கும் அதிகமான ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தி இரயிலைக் கன்னியாகுமரி வரை இயக்கி மீண்டும் கொண்டு வர முடியும்.
நாகர்கோவில் இரயில் நிலையத்தில் உள்ள இரண்டாம் கட்டப் பராமரிப்புப் பாதை (Maintenance Track) வசதியைப் பயன்படுத்தி இரயிலைப் பராமரிக்கவும் வழிவகை உள்ளது. கன்னியாகுமரி சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக இருப்பதால், இந்த நீட்டிப்பு மூலம் இரயில்வே துறைக்குக் கூடுதல் வருவாயும் கிடைக்கும்.
எனவே, கூடுதல் நிதிச் சுமையோ நேர நெருக்கடியோ இன்றிச் செயல்படுத்தக்கூடிய இக்கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட இரயில் பயணிகள் நலச் சங்கத்தின் (KKDRUA) பொதுச்செயலாளர் பி. எட்வர்ட் ஜெனி தென்னக இரயில்வே நிர்வாகத்திற்கு மனு அனுப்பியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: தனித்தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர் விஜய்!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 10:31:40 AM (IST)

சென்னை உயர் நீதிமன்றத்தில் 15 புதிய நீதிபதிகள் பதவியேற்பு: நாட்டிலேயே அதிக பெண் நீதிபதிகள்!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 8:49:45 AM (IST)

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் தனியாரிடம் ஒப்படைப்பா?: இஸ்ரோ விஞ்ஞானிகள் விளக்கம்!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 8:38:45 AM (IST)

தொகுதி மறுவரையறைக்கு எதிராக பேரவையில் தனித் தீர்மானம் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 10:29:24 AM (IST)

தொகுதி மறுவரையறை கூட்டம் திசைதிருப்பும் நாடகம் : கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு!
சனி 8, ஆகஸ்ட் 2026 8:17:18 PM (IST)

16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக வலைத்தளத் தடை : தமிழக முதல்வருக்கு எழுத்தாளர் கோரிக்கை!
சனி 8, ஆகஸ்ட் 2026 5:13:40 PM (IST)


