» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முதல்வர் விஜய் துறையில் டெண்டர் முறைகேடுகள்! — தூத்துக்குடியில் நயினார் நாகேந்திரன் பேட்டி!

புதன் 19, ஆகஸ்ட் 2026 7:55:05 AM (IST)

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் குறிப்பாக முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் உள்ள துறையிலும் பெருமளவில் டெண்டர் முறைகேடுகள் நடந்துள்ளன என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். 

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் "கர்நாடகாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு அம்மாநில அரசிற்கும் அதன் முதலமைச்சருக்கும் பாஜக சார்பில் எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். எந்தவொரு சூழ்நிலையிலும் ஒரு மனிதனின் உயிரைப் பறிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை.

தமிழக அமைச்சர்கள் அனைவரும் ஏற்கனவே தங்களது வழக்கமான 'வேலையை'த் தொடங்கிவிட்டனர். அவர்கள் யார், யார், எந்தெந்த இடங்களில் கமிஷன், லஞ்சம் வாங்குகிறார்கள் என்பது பற்றிய முழுமையான பட்டியல் பாஜகவிடம் உள்ளது.

தமிழக முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள துறையிலும் பெருமளவில் டெண்டர் முறைகேடுகள் நடந்துள்ளன. இது தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் விரைவில் மக்கள் மன்றத்தில் பாஜக வெளிக்கொண்டு வரும். தமிழகத்தில் ஆட்சியில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் ஆட்சி என்பது மக்களுக்குப் பயனுள்ளதாக இல்லாமல், மிகுந்த வேதனையான நாட்களாகவே அமைந்துள்ளன" என்றும் சாடினார்.


மக்கள் கருத்து

யாருAug 19, 2026 - 09:09:31 AM | Posted IP 162.1*****

தேர்தல் சோதனையில் பலகோடி பணம் சிக்கியது யாரால் ??? திருடர்கள் கூடாரம் தான் அரசியல்வாதிகள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory