» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பெண் எரித்துக்கொலை: கள்ளக்காதலன் வெறிச்செயல்!
புதன் 19, ஆகஸ்ட் 2026 8:02:58 AM (IST)
ஓட்டப்பிடாரம் அருகே பெண் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவத்தில், தீவிர சிகிச்சை பெற்று வந்த இரண்டு குழந்தைகளின் தாய் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சால்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவரின் மனைவி குருவலட்சுமி (35). இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.அதே பகுதியைச் சேர்ந்த சண்முகவேல் மகன் சின்ன கெங்குராஜ் (47) என்பவர் மனைவியைப் பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.
இவருக்கும் குருவலட்சுமிக்கும் இடையே கடந்த 5 ஆண்டுகளாகப் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது.இதனிடையே, குருவலட்சுமி மீண்டும் தனது கணவருடன் சேர்ந்து வாழத் தொடங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சின்ன கெங்குராஜ், குருவலட்சுமியிடம் அடிக்கடி சென்று தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 9-ஆம் தேதி குருவலட்சுமியின் வீட்டிற்குச் சென்ற சின்ன கெங்குராஜ், மீண்டும் தகராறு செய்து அவரைத் தாக்கியுள்ளார்.
பின்னர் தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை குருவலட்சுமி மீது ஊற்றித் தீ வைத்துவிட்டுத் தப்பிச் சென்றார். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், பலத்த தீக்காயமடைந்த குருவலட்சுமியை மீட்டுத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த பசுவந்தனை காவல் நிலையப் காவல்துறையினர், கொலை முயற்சி வழக்கின் கீழ் சின்ன கெங்குராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த குருவலட்சுமி சிகிச்சை பலனின்றி கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, பசுவந்தனை காவல்துறையினர் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் - பெங்களூரு சுற்றுவழி வந்தே பாரத் ரயிலுக்கு குமரி பயணிகள் சங்கம் கடும் எதிர்ப்பு
புதன் 19, ஆகஸ்ட் 2026 5:13:17 PM (IST)

தூத்துக்குடியில் தனியார் உணவகத்திற்கு ரூ.50,000 அபராதம் - மாநகராட்சி நிர்வாகம் அதிரடி!
புதன் 19, ஆகஸ்ட் 2026 4:34:18 PM (IST)

தஞ்சையில் காவல்துறை அதிகாரியை தாக்கியதாக கைதான இளைஞர் ஒரே நாளில் விடுதலை!
புதன் 19, ஆகஸ்ட் 2026 4:19:32 PM (IST)

புனித சவேரியார் தேவலாயத்தில் ரூ.2.28 கோடியில் சீரமைப்பு பணி: ஆட்சியர் பிரதாப் ஆய்வு
புதன் 19, ஆகஸ்ட் 2026 12:22:31 PM (IST)

போராட்டங்களில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கத் தடை — தமிழக கல்வித்துறை உத்தரவு!
புதன் 19, ஆகஸ்ட் 2026 12:00:46 PM (IST)

கடல் சீற்றம் எச்சரிக்கை: கடலோர மீனவ மக்கள் பாதுகாப்புடன் இருக்க ஆட்சியர் அறிவுறுத்தல்!
புதன் 19, ஆகஸ்ட் 2026 11:44:38 AM (IST)


