» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் கடைகளுக்கு சீல்: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 5:39:23 PM (IST)

கடைகளில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்காதெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட, உடல் நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களைக் கண்டறிந்து அழிக்கும் பணியில் மாநகராட்சி பொதுச் சுகாதாரப் பிரிவு அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதாரத் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது தடை செய்யப்பட்ட 60 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அதைப் பயன்படுத்திய கடைகளுக்கு ரூ. 2,600 அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மாநகரம் முழுவதும் நடத்திய ஆய்வில் 1,510 கிலோ எடை கொண்ட, சந்தையில் ரூ. 2.00 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் விதிமீறலில் ஈடுபட்ட கடைகளிடமிருந்து ரூ. 70,000 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா தெரிவித்துள்ளதாவது: "பிளாஸ்டிக் ஒழிப்புப் பணி மாநகரம் முழுவதும் தொடர்ச்சியாக நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். இனிவரும் காலங்களில் கள ஆய்வின் போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கண்டறியப்பட்டால், அபராதம் விதிக்கப்படுவதோடு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் கடைகள் உடனடியாகப் பூட்டிச் சீல் வைக்கப்படும்." எனத் தெரிவித்து்ளளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேங்காய்பட்டணத்தில் ரூ. 5 கோடியில் புதிய சுற்றுலாத்தளம்: ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 5:09:06 PM (IST)

சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் ஆவணி திருவிழா தொடங்கியது: ஆக.31ல் தேரோட்டம்!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 4:27:31 PM (IST)

தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம் விவகாரம்: அமைச்சரிடம் உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 3:36:28 PM (IST)

திமுக எம்எல்ஏக்களுக்கு அரசு வழங்கும் கார் வேண்டாம் - சட்டப்பேரவையில் உதயநிதி அறிவிப்பு
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 12:23:23 PM (IST)

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா சந்திப்பு
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 11:12:07 AM (IST)

சட்டசபையா? சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியா? என்று சந்தேகம் வருகிறது - உதயநிதி குற்றச்சாட்டு!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 11:02:20 AM (IST)


