» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கனிம வள கடத்தல், போதைப்பொருள் தடுப்பு: ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்!

வியாழன் 27, ஆகஸ்ட் 2026 5:32:50 PM (IST)

Lameetingcuty.jpg

தூத்துக்குடியில் சட்டம் - ஒழுங்கு மற்றும் கனிம வளங்கள் கடத்தல் தடுப்புக் குழு ஒருங்கிணைப்புக் கூட்டம்  மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது. 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் சட்டம் - ஒழுங்கு, சாலை பாதுகாப்பு, போதைப்பொருள்கள் தடுப்பு, கள்ளச்சாராயம் தடுப்பு மற்றும் கனிம வளங்கள் கடத்தல் தடுப்பு ஆகியவை தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (27.08.2026) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமை தாங்கினார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கைப் பராமரித்தல், விபத்துகளைக் குறைக்கச் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துதல், போதைப்பொருள்கள் மற்றும் கள்ளச்சாராய விற்பனையை முற்றிலுமாகத் தடுத்தல், சட்டவிரோத கனிம வளங்கள் கடத்தலைக் கண்காணித்து கடும் நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த மாவட்ட அளவிலான அரசு அலுவலர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory