» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

லங்கா பிரிமீயர் லீக்: பி-லவ் கேண்டி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது!

திங்கள் 21, ஆகஸ்ட் 2023 11:35:13 AM (IST)



லங்கா பிரிமீயர் லீக் தொடரில் இறுதி ஆட்டத்தில் வென்று பி-லவ் கேண்டி அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

லங்கா பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வந்தது. கடந்த ஜூலை 30ம் தேதி தொடங்கிய இந்த தொடரின் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் தம்புள்ளா ஆரா மற்றும் பி-லவ் கேண்டி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய தம்புள்ளா ஆரா அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் பெர்ணாண்டோ 5 ரன், குசல் மெண்டிஸ் 22 ரன், அடுத்து களம் இறங்கிய சமரவிக்ரமா 36 ரன், டி சில்வா 40 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் முடிவில் தம்புள்ளா ஆரா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களே எடுத்தது. இதையடுத்து 148 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பி-லவ் கேண்டி அணி களம் இறங்கியது. கேண்டி அணி தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ஹாரிஸ் 26 ரன், காமிந்து மெண்டிஸ் 44 ரன் எடுத்து சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இதையடுத்து களம் இறங்கிய சண்டிமால் 24 ரன், ஆசிப் அலி 19 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

இறுதியில் கேண்டி அணி 19.5 ஓவர்களில் 5 விகெட்டை இழந்து 151 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கேண்டி தரப்பில் மேத்யூஸ் 25 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்த ஆட்டத்தின் மேன் ஆப் தி மேட்ச் விருது மேத்யூஸ்-க்கும், தொடர் நாயகன் விருது, அதிக விக்கெட் எடுத்த வீரர் விருது, அதிக ரன் அடித்த வீரர் விருது, அதிக சிக்சர் அடித்த விருது போன்றவை வனிந்து ஹசரங்காவுக்கு வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory