» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கபடி போட்டி : செப். 2, 3 தேதிகளில் நடக்கிறது

வியாழன் 24, ஆகஸ்ட் 2023 8:14:35 AM (IST)

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கபடி போட்டி வருகிற 2, 3 தேதிகளில் நடக்கிறது.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடி கழக செயலாளர் கிறிஸ்டோபர் ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகமும், கோவை ஈஷா யோகா மையமும் இணைந்து தமிழ்நாட்டில் ஆண்கள், பெண்கள் கபடி போட்டியை நடத்த உள்ளது. இந்த போட்டிகள் மாவட்ட அளவிலும், மண்டல அளவிலும், பின்னர் மாநில அளவிலான போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. 

அதன்படி தூத்துக்குடி மாவட்ட அளவிலான ஆண்கள், பெண்கள் கபடி போட்டிகள் வருகிற 2, 3-ந் தேதிகளில் தூத்துக்குடி தருவை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது. போட்டிகள் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக ரப்பர் மேட்டில் நடக்கிறது.

போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். நிறுவன அணி வீரர்கள் போட்டியில் கலந்து கொள்ள முடியாது. அமெச்சூர் கபடி பெடரேசன் ஆப் இந்தியா விதிமுறைகள் பின்பற்றப்படும். அதன்படி ஆண்கள் எடை 85 கிலோவுக்கு கீழ், பெண்கள் 75 கிலோவுக்கு கீழ் இருக்க வேண்டும். மாவட்ட போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு மண்டல அளவிலான போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தின் சார்பில் கலந்து கொள்வார்கள். 

மாவட்ட போட்டியில் வெற்றி பெறும் ஆண்கள், பெண்கள் அணிகளுக்கு பரிசும், கேடயமும் வழங்கப்படும். ஆண்கள் பிரிவில் முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-வது பரிசு ரூ.7 ஆயிரம், 3-வது பரிசு ரூ.5 ஆயிரம், 4-வது பரிசு ரூ.4 ஆயிரம், பெண்கள் பிரிவில் முதல் பரிசு ரூ.6 ஆயிரம், 2-வது பரிசு ரூ.4 ஆயிரம், 3-வது பரிசு ரூ.3 ஆயிரம், 4-வது பரிசு ரூ.2 ஆயிரம் மற்றும் கேடயம் வழங்கப்படும். போட்டிகளில் நாக்அவுட் முறையில் நடைபெறும். உணவு வழங்கப்படும்.

போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள ஆண்கள், பெண்கள் அணியினர், தங்கள் அணியின் பெயரை ஈஷா யோகா மையத்தின் ஆகிய இணையதள முகவரியில் முன்பதிவு செய்யலாம். ஆண்கள் அணி Isha.co/kabaddimen ta என்ற முகவரியிலும், பெண்கள் அணி Isha.co/kabaddi women - ta என்ற முகவரியிலும் பதிவு செய்யலாம். மேலும் 83000 30999 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். வருகிற 30-ந் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த அணிகள் மட்டும் போட்டியில் கலந்து கொள்ள முடியும். மேலும் விவரங்களுக்கு 97153 29838, 94430 32943, 97894 55003 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory