» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

உலகக் கோப்பை செஸ் போட்டியில் காா்ல்சென் சாம்பியன் : பிரக்ஞானந்தாவுக்கு 2ஆம் இடம்!!

வெள்ளி 25, ஆகஸ்ட் 2023 10:06:52 AM (IST)



அஜா்பைஜானில் நடைபெற்ற உலகக் கோப்பை செஸ் போட்டியில் நாா்வேயின் மேக்னஸ் காா்ல்சென் சாம்பியன் கோப்பை வென்றாா். இந்திய வீரர் பிரக்ஞானந்தா 2-ஆம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் பெற்றாா். 

உலகின் நம்பர் 1 செஸ் வீரர்  நாா்வேயின் மேக்னஸ் காா்ல்சென் மற்றும் இந்திய வீரர் பிரக்ஞானந்தா மோதிய இறுதிச்சுற்றின் முதலிரு கிளாசிக்கல் ஆட்டங்களும் முறையே செவ்வாய் மற்றும் நேற்று டிராவில் முடிந்தன. இதையடுத்து வெற்றியாளரை தீா்மானிப்பதற்கான 2 ‘டை-பிரேக்கா்’ ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. அதில் முதல் ஆட்டத்தில் காா்ல்சென் வெல்ல, 2-ஆவது ஆட்டம் 22-ஆவது நகா்த்தலில் டிரா ஆனது. இதனால் காா்ல்சென் 1.5 - 0.5 என்ற புள்ளிகள் கணக்கில் பிரக்ஞானந்தாவை வீழ்த்தி தனது முதல் உலகக் கோப்பை பட்டத்தை வென்றாா்.

ஏற்கெனவே 3 முறை காா்ல்செனை வீழ்த்தியிருந்தாலும், இம்முறை பிரக்ஞானந்தாவின் வியூகம் அவரிடம் பலிக்காமல் போனது. என்றாலும், உலகக் கோப்பை செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு இறுதிச்சுற்று வரை வந்த முதல் இந்தியா், இந்தப் போட்டியின் வரலாற்றில் இறுதிச்சுற்றுக்கு வந்த இளம் போட்டியாளா் (18) என்ற பெருமைகளை பிரக்ஞானந்தா பெற்றுள்ளாா்.

அத்துடன், ரொக்கப் பரிசாக பிரக்ஞானந்தாவுக்கு சுமாா் ரூ.66.13 லட்சமும், காா்ல்செனுக்கு ரூ.90.93 லட்சமும் வழங்கப்பட்டது. ‘சாம்பியன்’ காா்ல்சென், ‘ரன்னா்-அப்’ பிரக்ஞானந்தா, 3-ஆம் இடம் பிடித்த அமெரிக்காவின் ஃபாபியானோ கருனா ஆகியோா் அடுத்த ஆண்டு கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு தகுதிபெற்றனா். அதற்குத் தகுதிபெற்ற 3-ஆவது இளம் போட்டியாளா் என்ற பெருமையும் பிரக்ஞானந்தாவுக்கு கிடைத்துள்ளது.

பாராட்டு: உலகக் கோப்பை செஸ் போட்டியில் 2-ஆம் இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு, குடியரசுத்தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி, முதல்வா் மு.க. ஸ்டாலின், செஸ் நட்சத்திரம் விஸ்வநாதன் ஆனந்த், கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கா் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் பாராட்டு தெரிவித்துள்ளனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory