» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ரன்ரேட் குறித்து சரியான தகவல் அளிக்கவில்லை: ஆப்கன் பயிற்சியாளர்

புதன் 6, செப்டம்பர் 2023 5:08:29 PM (IST)



ஆசிய கோப்பை தொடரின் இலங்கை அணிக்கு எதிரான  ஆட்டத்தில் ரன்ரேட் குறித்து சரியான தகவலை தங்களுக்கு தெரிவிக்கவில்லை என ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் ட்ராட் கூறியுள்ளார்.

ஆசிய கோப்பை தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் எடுத்தது.இதனையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 37.4 ஓவரில் 289 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இலங்கை அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.

இந்நிலையில் ஆட்ட அதிகாரிகளால் ரன்ரேட் குறித்த சரியான கணக்கீடுகள் தங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று ஆப்கானியர்கள் கூறினர். 37 ஓவர்கள் முடிவில், ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்திருந்தது. சூப்பர் சுற்றுக்கு ஆப்கானிஸ்தான் நுழைய ஒரு பந்தில் மூன்று ரன்கள் எடுக்க வேண்டும் என்ற தகவல் மட்டுமே அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. 37-வது ஓவரின் முதல் பந்தில் முஜீப் உர் ரஹ்மான் தூக்கி அடித்து பவுண்டரி லைனில் கேட்ச் ஆனார். இதனால் நான்-ஸ்ட்ரைக்கரில் இருந்த ரஷித் கான் போட்டி முடிந்து விட்டது என சோகத்தில் இருந்தார்.

ஆனாலும் சூப்பர்-4 சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பு அவர்களுக்கு இருந்தது என்பது அவர்களுக்கு தெரியவில்லை.  ஆப்கானிஸ்தான் 37.2 ஓவரில் 293, 37.3 ஓவரில் 294, 37.5 ஓவரில் 295, 38 ஓவரில் 296, அல்லது 38.1 ஓவரில் 297 ரன்கள் எடுத்தால் கூட ஆப்கானிஸ்தான் ரன்ரேட் அதிகமாகி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கும். இந்த தகவலை தங்களுக்கு தெரிவிக்கவில்லை என ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் ட்ராட் கூறியுள்ளார்.

இது குறித்து ட்ராட் கூறியதாவது: கூறப்பட்ட நிபந்தனைகளை அதிகாரிகள் தனது அணிக்கு தெரிவிக்கவில்லை. அந்த கணக்கீடுகள் எங்களுக்கு ஒருபோதும் தெரிவிக்கப்படவில்லை. நாங்கள் 37.1 ஓவர்களில் வெற்றி பெற வேண்டும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. நாங்கள் 295 அல்லது 297 ரன்களைப் பெறலாம் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory