» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கரீபியன் பிரிமியர் லீக் டி-20: கோப்பை வென்ற இம்ரான் தாஹீர் அணி!

திங்கள் 25, செப்டம்பர் 2023 11:30:59 AM (IST)



கரீபியன் பிரிமியர் லீக் தொடரில், 44 வயதில் இம்ரான் தாஹீர் கோப்பை வென்று கொடுத்திருக்கிறார்.

கரீபியன் பிரிமியர் லீக் தொடரின் ட்ரிபான்கோ நைட் ரைடர்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ் ஆகிய அணிகள் மோதின. இதில், கயானா அணிக்கு 44 வயது வீரர் இம்ரான் தாஹீர் கேப்டன்ஸி செய்தார். அதிக வயதுடைய வீரரை கேப்டனாக தேர்வு செய்ததற்கு கடும் எதிர்ப்புகள் இருந்தன. இந்நிலையில், அந்த எதிர்ப்புகளை தாண்டி இம்ரான் தாஹீர் சாதனை படைத்திருக்கிறார்.

கரீபியன் பிரிமியர் லீக் இறுதிப் போட்டியில் டாஸை இழந்து முதலில் களமிறங்கிய ட்ரிபான்கோ நைட் ரைடர்ஸ் அணியில், கேசி கர்டி 38 (45) மட்டும்தான் பெரிய ஸ்கோர் அடித்தார். அடுத்து, வால்டன் 10 (11) மற்றும் மார்க் தயல் 16 (9) ஆகியோர் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்களை அடித்தார்கள். மற்றவர்கள், கயானா அணியின் அதிரடி பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் ஒற்றை இலக்க ரன்களுக்கு சுருண்டனர்.

குறிப்பாக, அதிரடி வீரர்கள் பூரன் 1 (5), கேப்டன் பொல்லார்ட் 0 (4), ஆண்ட்ரே ரஸல் 3 (5), பிராவோ 8 (18), சுனில் நரைட் 1 (4) ஆகியோரும் சொதப்பியது, ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இறுதியில், ட்ரிபான்கோ அணியால் 94/10 ரன்களை மட்டும்தான் எடுக்க முடிந்தது. பிரிடோரியஸ் 4/26 விக்கெட்களையும், மோட்டே 4 ஓவர்களில் 2/7 விக்கெட்களையும், கேப்டன் இம்ரான் தாஹீரும் 4 ஓவர்களில் 2/8 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்கள்.

இலக்கை துரத்திக் களமிறங்கிய கயானா அமேசான் வாரியர்ஸ் அணியில், சைம் அயுப் 52 (41), ஷாய் ஹோப் 32 (32) இருவரும் அபாரமாக செயல்பட்டதால், அந்த அணி 14 ஓவர்களில் 99/1 ரன்களை சேர்த்து, 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. இதன்மூலம், அதக வயதில் (44 வயதில்) கோப்பை வென்றுகொடுத்த கேப்டனாக இம்ரான் தாஹீர் சாதனை படைத்துள்ளார். இதற்குமுன், தோனி 41 வயதில் கோப்பை வென்று கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோப்பை வென்றப் பிறகு பேசிய இம்ரான் தாஹீர், ''44 வயதான என்னை கேப்டனாக நியமித்ததால், ரசிகர்கள் அதிருப்தியில் இருந்தார்கள். அந்த குறையை போக்கிவிட்டேன். எங்களால் கோப்பை வெல்ல முடியும் என, இத்தொடர் துவங்குவதற்கு முன் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியிருந்தார். அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்'' எனக் கூறினார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory