» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

‘ஈ சாலா கப் நம்து’ - சாதித்து காட்டிய பெங்களூரு மகளிர் அணி: விராட் கோலி வாழ்த்து!!!!

திங்கள் 18, மார்ச் 2024 11:54:07 AM (IST)



மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

"இந்த தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். டெல்லியில் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவினோம். அது சரியான நேரத்தில் நாங்கள் மீண்டு வர உதவியது. இது மாதிரியான தொடர்களில் அதுதான் மிகவும் முக்கியம். கடந்த ஆண்டு நாங்கள் நிறைய படிப்பினைகள் பெற்றோம். எது சரி? எது தவறு? என அதன் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.

அணியை நாங்கள்தான் கட்டமைக்க வேண்டும் என எங்கள் அணி நிர்வாகம் சொன்னது. இந்த கோப்பையை அணியாக சேர்ந்து நாங்கள் வென்றுள்ளோம். இந்த நேரத்தில் அணியின் அன்பான ரசிகர்களுக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். ‘ஈ சாலா கப் நம்தே’ என சொல்வது உண்டு. இப்போது ‘ஈ சாலா கப் நம்து’ (இப்போது கோப்பை நம் வசம்)” என அவர் தெரிவித்தார்.

வெற்றி பெற்ற ஆர்சிபி அணியினரை வீடியோ அழைப்பு மூலம் விராட் கோலி வாழ்த்தி இருந்தார். மகளிர் பிரீமியர் லீக் தொடரின் கோப்பையை வென்ற ஆர்சிபி வீராங்கனைகள் உற்சாகமாக போஸ் கொடுத்தனர். அந்த அணியின் ரசிகர்கள் வீதிகளில் வெற்றியை கொண்டாடி தீர்த்தனர். சோஃபி மோலினக்ஸ், பிளேயர் ஆப் தி மேட்ச் விருதை வென்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory