» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
அபிஷேக் சர்மா அதிரடி: பாகிஸ்தானை மீண்டும் வென்றது இந்தியா!
திங்கள் 22, செப்டம்பர் 2025 8:33:44 AM (IST)

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் துபாயில் நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்றின் 2-வது ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக சகிப்சதா பர்ஹான் 58 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் ஷிவம் துபே 2 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
டி20 கிரிக்கெட்டில் இந்த ஆட்டத்தில் கைப்பற்றிய விக்கெட்டையும் சேர்த்து ஹர்திக் பாண்ட்யா பாகிஸ்தானுக்கு எதிராக 15 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான டி20 போட்டிகளில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார்.
பின்னர் 172 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 174 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 74 ரன்களும், சுப்மன் கில் 47 ரன்களும் அடித்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரவூப் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அபிஷேக் சர்மா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பஞ்சாப் கிங்ஸிடம் படுதோல்வி: மும்பை அணியில் அதிரடி மாற்றமா? ஹர்திக் பாண்டியா ஆவேசம்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 11:06:10 AM (IST)

மீண்டும் ஒருமுறை தமிழகத்தின் பெருமையை உயர்த்திய வைஷாலி: நயினார் நாகேந்திரன் பாராட்டு
வியாழன் 16, ஏப்ரல் 2026 5:19:23 PM (IST)

கொல்கத்தாவை வீழ்த்தி சிஎஸ்கே அபார வெற்றி: புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!
புதன் 15, ஏப்ரல் 2026 12:02:33 PM (IST)

ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள்: அறிமுகப் போட்டியிலேயே வரலாறு படைத்த பிரஃபுல் ஹிங்கே!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 5:25:17 PM (IST)

ஐபிஎல் 2026: அதிரடி ஆட்டத்தில் தடுமாறும் மும்பை - டாடீஸ் ஆர்மி உத்தி தோல்வியா?
திங்கள் 13, ஏப்ரல் 2026 4:58:37 PM (IST)

முடிவுக்கு வந்த தோல்விப் பயணம்: டெல்லியை வீழ்த்தி சிஎஸ்கே முதல் வெற்றி!
ஞாயிறு 12, ஏப்ரல் 2026 10:43:14 AM (IST)

