» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் அடுத்த 3 போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தது

புதன் 22, அக்டோபர் 2025 12:37:34 PM (IST)

இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் அடுத்த 3 போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் அனைத்து விற்று தீர்ந்து விட்டதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டி தொடரில் பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இதன் மூலம் 0-1 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் ஆட்டம் அடிலெய்டுவில் நாளை (23-ந் தேதி) நடக்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு இருக்கிறது. தோற்றால் தொடரை இழந்து விடும்.சுப்மன்கில் தலைமையிலான இந்திய அணி முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்து விற்று தீர்ந்து விட்டதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அடிலெய்டு ஓவல் 42,500 பார்வையாளர்கள் அமரும் வகையில் உள்ளது. பேட்டிங்குக்கு சாதகமான இந்த மைதானத்தில் 8 போட்டிகளில் 6 முறை சேசிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது.

சிட்னியில் நடைபெறும் கடைசி ஒருநாள் போட்டிக்கான டிக்கெட்டுகள் மற்றும் கான்பெராவில் நடைபெறும் முதல் டி20 போட்டிக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory