» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் சதம்: மும்பை வீராங்கனை சாதனை!
செவ்வாய் 27, ஜனவரி 2026 12:11:15 PM (IST)

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்த ஆல்ரவுண்டர் நாட் ஸ்கைவர்-பிரண்ட், மகளிர் பிரீமியர் லீக்கில் சதம் அடித்த முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.
மகளிர் பிரீமியர் லீக் 2026 சீசனில் 16 வது போட்டி வதோதராவில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில், ஆர்சிபி அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில், டாஸ் வென்ற ஆர்சிபி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹெய்லே மேத்யூஸ், சஜீவன் சஜனா ஆகியோர் தொடக்க பேட்டர்களாக களம் இறங்கினர். இதில், சஜனா 07 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த மேத்யூஸ் உடன் ஸ்கைவர்-பிரன்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில், மேத்யூஸ் 39 பந்தில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் விளையாடிய ஸ்கைவர்-பிரன்ட் அபாரமாக விளையாடி 57 பந்தில் சதம் அடித்தார். இதன்மூலம் மகளிர் பிரீமியர் லீக் வரலாற்றில் சதம் அடித்த முதல் வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்தார்.
இங்கிலாந்து வீராங்கனையான இவர், 16 பவுண்டரி, 1 சிக்சருடன் 100 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும், முன்பு மகளிர் பிரீமியர் லீக் தொடரில் 1000 ரன்களை கடந்த முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்தவரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அபிஷேக், ஸ்ரேயாஸ் அதிரடி பேட்டிங்: இங்கிலாந்து டி20 தொடரின் முதல் போட்டி மழையால் ரத்து!
வியாழன் 2, ஜூலை 2026 11:55:02 AM (IST)

இந்திய ஜூனியர் அணியில் கோவில்பட்டி ஹாக்கி வீரர் தேர்வு : பெல்ஜியம் தொடரில் விளையாட வாய்ப்பு!
வியாழன் 2, ஜூலை 2026 8:50:55 AM (IST)

பெனால்டி ஷூட்-அவுட்: ஜெர்மனியை வீழ்த்தி பராகுவே அதிரடி வெற்றி!
செவ்வாய் 30, ஜூன் 2026 12:18:39 PM (IST)

மகளிர் டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி - தொடரிலிருந்து வெளியேற்றம்!
திங்கள் 29, ஜூன் 2026 12:41:26 PM (IST)

ஒரு ரன்னில் அயர்லாந்திடம் தோல்வி: தொடரை இழந்தது இந்திய அணி!
திங்கள் 29, ஜூன் 2026 12:33:39 PM (IST)

டி20 உலக சாம்பியன் இந்தியாவை வீழ்த்தி வரலாறு படைத்தது அயர்லாந்து அணி!
சனி 27, ஜூன் 2026 5:27:38 PM (IST)


