» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஐபிஎல் விதிமுறை மீறல்: ராஜஸ்தான் இளம் வீரரிடம் ஆக்ரோஷம் காட்டிய ஜேமிசனுக்கு அபராதம்!
சனி 2, மே 2026 11:49:03 AM (IST)

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷியிடம் ஆக்ரோஷமாக நடந்துகொண்ட டெல்லி கேபிடல்ஸ் வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசனுக்கு, ஐபிஎல் ஒழுங்கு நடவடிக்கை குழு 'டிமெரிட்' புள்ளி வழங்கி எச்சரித்துள்ளது.
ஜெய்ப்பூரில் கடந்த நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 43-வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. போட்டியின் முதல் இன்னிங்ஸின் 2-வது ஓவரில், ராஜஸ்தான் அணியின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் விக்கெட்டை கைல் ஜேமிசன் வீழ்த்தினார்.
விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் ஜேமிசன், அவுட் ஆகி வெளியேறிய இளம் வீரர் வைபவ் அருகே சென்று ஆக்ரோஷமான சைகைகள் மற்றும் வார்த்தைகளால் அவரை வழிஅனுப்பி வைத்தார். இந்தச் செயல் களத்தில் இருந்த வீரர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
ஜேமிசனின் இந்தச் செயல், ஐபிஎல் நடத்தை விதிகளின் 2.5-வது பிரிவின் கீழ் (விளையாட்டு உணர்வுக்கு எதிராக மற்ற வீரர்களைத் தூண்டும் வகையில் செயல்படுதல்) விதிமீறலாகக் கருதப்படுகிறது. இது லெவல்-1 குற்றமாகக் கருதப்படுவதால், ஜேமிசனுக்கு ஒரு 'டிமெரிட்' புள்ளி வழங்கப்பட்டதுடன், போட்டி நடுவர் ராஜீவ் சேத் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட ஜேமிசன், நடுவரின் தண்டனையை ஏற்றுக் கொண்டார். இந்த ஆக்ரோஷமான சூழலுக்கு மத்தியிலும், இப்போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி சிறப்பாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காமன்வெல்த் விளையாட்டு: மும்முறை தாண்டுதல் பிரிவில் பதக்கம் வென்று தமிழக வீரர்கள் அசத்தல்!
சனி 1, ஆகஸ்ட் 2026 4:59:47 PM (IST)

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஜின்கியா ரஹானே ஓய்வு: வீடியோ வெளியிட்டு உருக்கம்!
வியாழன் 30, ஜூலை 2026 4:44:14 PM (IST)

காமன்வெல்த் போட்டி 2026: இந்திய வீரர்கள் சாதனை!
புதன் 29, ஜூலை 2026 11:18:45 AM (IST)

இலங்கை டெஸ்ட் தொடர்: ஷுப்மன் கில் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு!
செவ்வாய் 28, ஜூலை 2026 4:46:27 PM (IST)

வைபவ் சூர்யவன்ஷி அபாரம்: ஜிம்பாப்வேயை 3-0 என வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இந்தியா!
திங்கள் 27, ஜூலை 2026 4:59:28 PM (IST)

ஆசிய விளையாட்டுப் போட்டி 2026: நேரடியாகக் காலிறுதியில் களம் காணும் இந்தியா, பாகிஸ்தான்!
சனி 25, ஜூலை 2026 5:39:24 PM (IST)


