» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
சுதர் சுழலில் சிக்கிய இலங்கை: காலே டெஸ்ட்டில் 165 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!
புதன் 19, ஆகஸ்ட் 2026 3:42:33 PM (IST)

இலங்கைக்கு எதிராக நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில், சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதரின் அபார பந்துவீச்சால் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இலங்கையின் காலே நகரில் ஆகஸ்ட் 15 அன்று தொடங்கிய இப்போட்டியில், இந்திய அணி நிர்ணயித்த 372 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி இலங்கை அணி தனது 2-வது இன்னிங்ஸை விளையாடியது.கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா (59 ரன்கள்) மற்றும் சோனல் தினுஷா (84 ரன்கள்) ஆகியோர் அரைசதம் அடித்துப் போராடினர்.
வரிசையாக வீழ்ந்த விக்கெட்டுகள்: மற்ற வீரர்களான டிக்வெல்லா (10), நுவந்தா (20) சொற்ப ரன்களில் வெளியேற, ஜெயசூர்யா மற்றும் லஹிரு குமாரா ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தனர். இறுதியில் இலங்கை அணி 206 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
சுழற்பந்து வீச்சில் அசத்திய சுதர்:
இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதர் 55 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கையின் பேட்டிங் வரிசையைச் சரித்தார். இப்போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து இவர் மொத்தம் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.மேலும், பிரஷித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளையும், சிராஜ் மற்றும் ஜடேஜா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து மொத்தம் 211 ரன்கள் குவித்த இந்திய வீரர் தேவ்தத் படிக்கல் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 2 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் ஆகஸ்ட் 23 அன்று கொழும்புவில் நடைபெறவுள்ளது.
ஸ்கோர் விவரம்:
இந்தியா (1st Innings): 462/10
இலங்கை (1st Innings): 284/10
இந்தியா (2nd Innings): 193/10 (48.5 ஓவர்கள்)
இலங்கை (2nd Innings): 206/10 (77.4 ஓவர்கள்)
முடிவு: இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வெறும் ₹100-க்கு ஜாம்ஷெட்பூர் கால்பந்து கிளப்பை விற்பனை செய்த டாடா ஸ்டீல்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 5:24:48 PM (IST)

வயது முக்கியமல்ல, திறமைதான் முக்கியம்: வைபவ் சூர்யவன்ஷிக்கு பிரெட் லீ பாராட்டு!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 4:14:44 PM (IST)

காமன்வெல்த் விளையாட்டு: மும்முறை தாண்டுதல் பிரிவில் பதக்கம் வென்று தமிழக வீரர்கள் அசத்தல்!
சனி 1, ஆகஸ்ட் 2026 4:59:47 PM (IST)

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஜின்கியா ரஹானே ஓய்வு: வீடியோ வெளியிட்டு உருக்கம்!
வியாழன் 30, ஜூலை 2026 4:44:14 PM (IST)

காமன்வெல்த் போட்டி 2026: இந்திய வீரர்கள் சாதனை!
புதன் 29, ஜூலை 2026 11:18:45 AM (IST)

இலங்கை டெஸ்ட் தொடர்: ஷுப்மன் கில் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு!
செவ்வாய் 28, ஜூலை 2026 4:46:27 PM (IST)


