» சினிமா » செய்திகள்

குறுகிய காலத்திலேயே சாதனைகளை செய்து காட்டியவர்: உதயநிதிக்கு கமல் வாழ்த்து!

திங்கள் 27, நவம்பர் 2023 4:08:20 PM (IST)



அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரைபிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.அதில், 'தான் எடுத்துக்கொண்ட பொறுப்புகளில் குறுகிய காலத்திலேயே குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்து காட்டியவர் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின்.

தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும், திமுகவின் இளைஞரணிச் செயலாளராகவும் திறம்படச் செயலாற்றி வரும் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்' என்று பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து

முட்டாள்Nov 29, 2023 - 07:35:19 PM | Posted IP 162.1*****

ஹி.. ஹி.. என்ன சாதனை? அரசியல்வாதிகள்கோடி கோடியாக சொத்து சேர்த்து வச்ச சாதனையா? நீட் ஒழிச்சது மாதிரியா? கூத்தாடி பால்டாயில்..

இரட்டை இலைNov 28, 2023 - 02:06:24 PM | Posted IP 172.7*****

சந்திரமுகியாக மாறிவிட்டார் உலக நாயகன் . (200 ரூபாய் கொத்தடிமை )

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory