» சினிமா » செய்திகள்

சூர்யாவின் கங்குவா 2 பாகங்களாக வெளியாகிறது!

செவ்வாய் 9, ஜூலை 2024 4:16:00 PM (IST)



சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'கங்குவா' திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'கங்குவா'. இதில் சூர்யா நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானியும் வில்லனாக நட்டி (நடராஜ்) நடித்துள்ளனர். மேலும் அனிமல் படத்தில் வில்லனாக நடித்து கவனம் ஈர்த்த நடிகர் பாபி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக உள்ளது. படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். தற்போது, முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு மட்டுமே முடிந்திருப்பதாகவும் இரண்டாம் பாகம் 2026-ல் வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

46 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் ரஜினி -கமல்!!

திங்கள் 8, செப்டம்பர் 2025 3:52:59 PM (IST)


Sponsored Ads



Tirunelveli Business Directory