» சினிமா » செய்திகள்
ரஜினியின் கூலி படத்தில் இணைந்த உபேந்திரா!
சனி 24, ஆகஸ்ட் 2024 5:36:49 PM (IST)

நடிகர் ரஜினிகாந்த்தின் கூலி திரைப்படத்தில் நடிகர் உபேந்திரா இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171 படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, படத்தின் இந்தியளவு வணிகத்திற்காக பிற மொழி நட்சத்திர நடிகர்களை நடிக்க வைக்க தயாரிப்பு நிறுவனம் முயன்று வருவதாகத் தகவல் வெளியானது. முக்கியமாக, கூலி படத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் அவர் மறுத்ததாகவும் கூறப்பட்டது. தற்போது, கூலி படத்தில் பிரபல கன்னட நடிகர் உப்பேந்திரா இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உபேந்திரா தமிழில் சத்யம் திரைப்படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நடிகை வனிதா படத்தில் அனுமதியின்றி பாடல் : வழக்கு தொடர்ந்தார் இளையராஜா!
வெள்ளி 11, ஜூலை 2025 12:35:37 PM (IST)

விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா? நயன்தாரா விளக்கம்!
வியாழன் 10, ஜூலை 2025 5:41:10 PM (IST)

பாகுபலி 1, 2 பாகங்கள் மறுவெளியீடு: தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
வியாழன் 10, ஜூலை 2025 5:34:40 PM (IST)

அயோத்தி பட தெலுங்கு ரீமேக்கில் நாகார்ஜுனா
புதன் 9, ஜூலை 2025 12:20:22 PM (IST)

நடன இயக்குநர் சாண்டி பிறந்தநாள்: ரஜினிகாந்த் வாழ்த்து!
திங்கள் 7, ஜூலை 2025 5:13:10 PM (IST)

20 வருடங்களுக்கு பிறகு எஸ்.ஜே சூர்யா இயக்கும் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர் ரஹ்மான்!
திங்கள் 7, ஜூலை 2025 5:08:58 PM (IST)
