» சினிமா » செய்திகள்
கூலி படம் குறித்து தவறான தகவலை பரப்பாதீர்கள் : சிவகார்த்திகேயன் வேண்டுகோள்!
வெள்ளி 8, நவம்பர் 2024 3:50:48 PM (IST)

‘கூலி’ படத்தில் நான் நடிப்பதாக தவறான செய்திகளை பகிர்ந்து கொள்ளாதீர்கள்” என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
‘கூலி’ படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின. அது தொடர்பான கேள்விக்கு சிவகார்த்திகேயன், "மாவீரன் தயாரிப்பாளர் அருண் விஸ்வா, இயக்குநர் சந்துரு, இயக்குநர் மடோன் அஸ்வின், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட அனைவருமே எனக்கு நண்பர்கள். நாங்கள் அடிக்கடி சந்தித்து உரையாடுவோம்.
ஆனால், ‘கூலி’ படப்பிடிப்புக்கு இன்னும் செல்லவில்லை. எனது வீட்டிற்கு எதிரில் தான் படப்பிடிப்பு நடைபெறுகிறது. ஆனால், ‘அமரன்’ விளம்பரப்படுத்தும் பணிகளால் இன்னும் படப்பிடிப்பு தளத்துக்கு செல்லவில்லை. ‘கூலி’-யில் நான் நடிக்கவில்லை. அது எனது தலைவர் படம். ஆகையால் தவறான செய்திகளை பகிர்ந்து கொள்ளாதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கூலி’. இதில் ஆமிர்கான் கவுரவ கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஏ.ஆர். ரஹ்மானுடன் மத்திய அமைச்சர் எல். முருகன் சந்திப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:32:42 PM (IST)

சிம்பு படத்திற்கு கண்டிஷன் போட்ட தனுஷ்..? வெற்றி மாறன் விளக்கம்!
திங்கள் 30, ஜூன் 2025 12:25:38 PM (IST)

எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கும் கில்லர் அதிகாரபூர்வ அறிவிப்பு
வெள்ளி 27, ஜூன் 2025 4:21:57 PM (IST)

வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் 10 படங்கள்: இயக்குநர்கள் பட்டியல் அறிவிப்பு!
வெள்ளி 27, ஜூன் 2025 4:15:45 PM (IST)

ஆஸ்கர் விருது விழா: கமல்ஹாசனுக்கு அழைப்பு!
வெள்ளி 27, ஜூன் 2025 10:41:00 AM (IST)

கண்ணப்பா படத்தை ட்ரோல் செய்தால் கடும் நடவடிக்கை: படக்குழு எச்சரிக்கை!
வியாழன் 26, ஜூன் 2025 5:44:50 PM (IST)
