» சினிமா » செய்திகள்
விஜய் 69’ படத்தில் நடிக்கவில்லை: சிவராஜ் குமார் தகவல்
செவ்வாய் 19, நவம்பர் 2024 5:44:07 PM (IST)

"ஹெச்.வினோத் இயக்கும் ‘விஜய் 69’ படத்தில் நான் நடிக்கவில்லை" என நடிகர் சிவராஜ் குமார் தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு ‘விஜய் 69’ படத்தில் தன்னை நடிக்க வைக்க அணுகியதாக சிவராஜ் குமார் அளித்த பேட்டியொன்றில் தெரிவித்தார். விஜய் - சிவராஜ் குமார் இணைந்து நடிக்கிறார்கள் என்ற செய்தி இணையத்தை ஆட்கொண்டது. ஆனால், தற்போது அப்படத்தில் தான் நடிக்கவில்லை என்று சிவராஜ் குமார் தெரிவித்துள்ளார்.
இப்போது அளித்த பேட்டியில், சில தினங்களுக்கு முன்பு இயக்குநர் ஹெச்.வினோத் தன்னை சந்தித்து விஜய் படத்தில் நடிப்பது சாத்தியமில்லை எனவும், விரைவில் நல்ல கதையுடன் வேறொரு படத்தில் சந்திப்போம் என்று கூறியதாக தெரிவித்துள்ளார் சிவராஜ் குமார்.
இதன் மூலம் ‘விஜய் 69’ படத்தில் சிவராஜ் குமார் நடிக்கவில்லை என்பது தெளிவாகிறது. ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘விஜய் 69’. கே.வி.என் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். அடுத்த ஆண்டு அக்டோபரில் இப்படம் வெளியாகவுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நடிகை வனிதா படத்தில் அனுமதியின்றி பாடல் : வழக்கு தொடர்ந்தார் இளையராஜா!
வெள்ளி 11, ஜூலை 2025 12:35:37 PM (IST)

விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா? நயன்தாரா விளக்கம்!
வியாழன் 10, ஜூலை 2025 5:41:10 PM (IST)

பாகுபலி 1, 2 பாகங்கள் மறுவெளியீடு: தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
வியாழன் 10, ஜூலை 2025 5:34:40 PM (IST)

அயோத்தி பட தெலுங்கு ரீமேக்கில் நாகார்ஜுனா
புதன் 9, ஜூலை 2025 12:20:22 PM (IST)

நடன இயக்குநர் சாண்டி பிறந்தநாள்: ரஜினிகாந்த் வாழ்த்து!
திங்கள் 7, ஜூலை 2025 5:13:10 PM (IST)

20 வருடங்களுக்கு பிறகு எஸ்.ஜே சூர்யா இயக்கும் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர் ரஹ்மான்!
திங்கள் 7, ஜூலை 2025 5:08:58 PM (IST)
