» சினிமா » செய்திகள்

பாகுபலி 1, 2 பாகங்கள் மறுவெளியீடு: தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

வியாழன் 10, ஜூலை 2025 5:34:40 PM (IST)



பாகுபலி 1 & 2 பாகங்களை இணைத்து வருகிற அக். 31 ஆம் தேதி மறுவெளியீட செய்ய உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் நடிகர்கள் பிரபாஸ், அனுஷ்கா ஷெட்டி, சத்யராஜ் நடிப்பில் உருவான திரைப்படம் பாகுபலி. கடந்த 2015 ஆம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் இந்திய சினிமாவின் தரத்தையும் உயர்த்தியது.

கட்டப்பா எதற்காக பாகுபலியைக் கொன்றார்? என்ற பெரும் ஆவலுடன் முடிக்கப்பட்டு பார்வையாளர்களை ஏங்கச் செய்த ‘பாகுபலி’ முதல் பாகத்தால் இரண்டாம் பாகமும் ரூ. 1800 கோடி வரை வசூலைக் குவித்து மாபெரும் வணிக வெற்றிப்படமானது.

இந்த நிலையில் பாகுபலி வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து பாகுபலி 1 & 2 பாகங்களை இணைத்து வருகிற அக். 31 ஆம் தேதி மறுவெளியீட செய்ய உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory