» சினிமா » செய்திகள்

விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா? நயன்தாரா விளக்கம்!

வியாழன் 10, ஜூலை 2025 5:41:10 PM (IST)



விவகாரத்து தொடர்பாக வெளியான வதந்திகளுக்கு நடிகை நயன்தாரா விளக்கம் அளித்துள்ளார். 

இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். நீண்டகாலமாகக் காதலித்து வந்த இந்த இணை, பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்ததுடன் தங்களின் திருமண நிகழ்வை ஆவணப்படுத்தி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியிட்டனர்.

தொடர்ந்து, வாடகைத் தாய் மூலம் இந்த இணைக்கு இரு ஆண் குழந்தைகள் பிறந்தன. அவர்களுக்கு உயிர், உலக் எனப் பெயரிட்டுள்ளனர். இந்த நிலையில், கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் விவாகரத்து முடிவில் இருப்பதாக நிறைய வதந்திகள் பரவின. மேலும், சில செய்தி நிறுவனங்களும் செய்திகளாக மாற்றி வெளியிட்டன.

தற்போது, இந்த வதந்திகளுக்குப் பதிலளிக்கும் விதமாக நயன்தாரா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவனுடன் வேடிக்கைப் பார்க்கும் கோணத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து, "எங்களைக் குறித்த வதந்திகளைப் பார்க்கும்போது எங்களின் ரியாக்‌ஷன்” என நகைச்சுவையாகப் பதிலளித்துள்ளார். இதன் மூலம், இருவருக்கும் இடையே எந்தப் பிரச்னையும் இல்லை என்று மறைமுகமாக தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory