» சினிமா » செய்திகள்
விடாமுயற்சி ரிலீஸ் : அஜித் ரசிகர்கள் உற்சாகம்!
வியாழன் 6, பிப்ரவரி 2025 3:25:22 PM (IST)

அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் உலகம் முழுக்க திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் நீண்ட காலமாக எடுக்கப்பட்டு வந்தது. மேலும், இந்தப் படத்தின் ரிலீஸ் பலமுறை ஒத்திவைக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், பல்வேறு தடைகளை தாண்டி இன்று (பிப்ரவரி 6) விடாமுயற்சி திரைப்படம் உலகம் முழுக்க திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. நடிகர் அஜித் குமாரின் திரைப்படம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ரிலீஸ் ஆகியுள்ளதை அடுத்து, ரசிகர்கள் திரையரங்குகளை நோக்கி படையெடுத்தனர்.
இன்று அதிகாலை முதலே திரையரங்கிற்கு வரத் தொடங்கிய ரசிகர்கள் விடாமுயற்சி ரிலீஸ்-ஐ ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடித் தீர்த்தனர். விடாமுயற்சி திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆகியுள்ளதை அடுத்து, இந்தப் படம் வசூலில் சாதனை படைக்கும் என்று தெரிகிறது.
இந்தப் படத்தில் நடிகர் அஜித் குமார், ஆரவ், அர்ஜூன் உள்பட திரிஷா, ரெஜினா கசாண்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் ரிலீசை ஒட்டி கடந்த சில நாட்களில் இந்தப் படத்தின் சிறப்பு போஸ்டர், வீடியோக்களை படத்தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு வந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நடிகை வனிதா படத்தில் அனுமதியின்றி பாடல் : வழக்கு தொடர்ந்தார் இளையராஜா!
வெள்ளி 11, ஜூலை 2025 12:35:37 PM (IST)

விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா? நயன்தாரா விளக்கம்!
வியாழன் 10, ஜூலை 2025 5:41:10 PM (IST)

பாகுபலி 1, 2 பாகங்கள் மறுவெளியீடு: தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
வியாழன் 10, ஜூலை 2025 5:34:40 PM (IST)

அயோத்தி பட தெலுங்கு ரீமேக்கில் நாகார்ஜுனா
புதன் 9, ஜூலை 2025 12:20:22 PM (IST)

நடன இயக்குநர் சாண்டி பிறந்தநாள்: ரஜினிகாந்த் வாழ்த்து!
திங்கள் 7, ஜூலை 2025 5:13:10 PM (IST)

20 வருடங்களுக்கு பிறகு எஸ்.ஜே சூர்யா இயக்கும் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர் ரஹ்மான்!
திங்கள் 7, ஜூலை 2025 5:08:58 PM (IST)
