» சினிமா » செய்திகள்
விஜய்யின் பிறந்தநாளில் ஜனநாயகன் ஸ்பெஷல் அப்டேட்!
வியாழன் 12, ஜூன் 2025 10:27:35 AM (IST)

விஜய்யின் பிறந்தநாளில் ஜனநாயகன் திரைப்படத்தின் ஸ்பெஷல் அப்டேட் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் 'ஜனநாயகன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது. 'ஜனநாயகன்' படத்திற்கு பிறகு முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட உள்ளார்.
இது விஜய்யின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். வில்லனாக பாபி டியோல் நடிக்கிறார். இவர்களுடன் சேர்ந்து முக்கிய கதாப்பாத்திரங்களில் நரேன், மமிதா பைஜு, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்த நிலையில், ஜன நாயகன் படத்தின் ஸ்பெஷல் அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது, இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை விஜய்யின் பிறந்தநாளான வருகிற ஜூன் 22-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஏற்கனவே விஜய் நடித்த 'தி கோட்' படத்தின் கிளிம்ப்ஸும் இதேபோல் விஜய்யின் பிறந்தநாளில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விஜயின் ஜனநாயகன் தாமதம் : திரையரங்குகளுக்கு ரூ.100 கோடி நஷ்டம்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 5:05:48 PM (IST)

தனுஷ் உடன் திருமணமா? - மிருணாள் தாக்கூர் விளக்கம்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 4:59:31 PM (IST)

திரைக்கே வராத ரீமேக் திரைப்படத்திற்கு தமிழக அரசின் 3 விருதுகள் அறிவிப்பால் சர்ச்சை!
திங்கள் 2, பிப்ரவரி 2026 12:25:51 PM (IST)

ஜெய் பீம் திரைப்படத்திற்கு தமிழக அரசின் 7 விருதுகள் அறிவிப்பு: இயக்குநர் த.செ.ஞானவேல் நன்றி!
சனி 31, ஜனவரி 2026 5:45:27 PM (IST)

ராஜமௌலியின் வாரணாசி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
வெள்ளி 30, ஜனவரி 2026 5:21:22 PM (IST)

தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்!
வெள்ளி 30, ஜனவரி 2026 12:24:05 PM (IST)

