» சினிமா » செய்திகள்

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்

திங்கள் 14, ஜூலை 2025 11:17:58 AM (IST)

நடிகை சரோஜா தேவி வயது முதிர்வு காரணமாக பெங்களூருவில் இன்று காலமானார். அவருக்கு வயது 87.

இந்திய திரைத்துறை வரலாற்றில் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சரோஜா தேவி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். இவரது 14 -ம் வயதில் மகாதேவி காளிதாசா என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் 1955 -ல் திரைத்துறைக்கு அறிமுகமானார்.

எம்.ஜி.ஆர். உடன் 26 படங்களிலும், சிவாஜி கணேசனுடன் 22 படங்களிலும் நடித்துள்ளார். 50 ஆண்டுகால திரை வாழ்வில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். விஜய்யுடன் ஒன்ஸ்மோர், சூர்யாவுடன் ஆதவன் படங்களில் சரோஜா தேவி நடித்திருந்தார்.

கன்னடத்துப் பைங்கிளி, அபிநய சரஸ்வதி உள்ளிட்ட அடைமொழிகளில் ரசிகர்களால் அழைக்கப்பட்டவர். இவரது நடிப்பிற்காக பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகளை பெற்றார். 2008ல் வாழ்நாள் சாதனையாளருக்கான மத்திய அரசின் தேசிய விருதைப் பெற்றிருந்தார். இவருக்கு 1967ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி ஸ்ரீ ஹர்ஷாவுடன் திருமணம் நடந்தது. ஆனால் ஸ்ரீஹர்ஷா 1986ம் ஆண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory