» சினிமா » செய்திகள்

ரஜினியின் கூலி ட்ரெய்லர் ஆக.2-ல் வெளியாகும் : லோகேஷ் கனகராஜ் தகவல்

செவ்வாய் 15, ஜூலை 2025 5:33:58 PM (IST)



ரஜினி நடித்துள்ள ’கூலி’ படத்தின் ட்ரெய்லர் ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகும் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கூலி’. இப்படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஆமிர்கான், ஸ்ருதிஹாசன், சவுபின் சாகீர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிந்து வருகிறார். ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் 2 பாடல்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. 

டீசர், ட்ரெய்லர் உள்ளிட்டவை எப்போது என்ற எந்தவொரு தகவலுமே தெரியாமல் இருந்தது. இது தொடர்பாக லோகேஷ் கனகராஜ், "‘கூலி’ படத்துக்கு எதிர்பார்ப்பு ரொம்பவே அதிகமாக இருக்கிறது. எனக்கே தெரியாத விஷயங்களை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

நான் தினமும் எழுந்தவுடன் சமூக வலைதளத்தில் படத்தைப் பற்றி ஏதேனும் செய்திகள் இருக்கும். அது ரொம்பவே பிடித்திருக்கிறது. அவை அனைத்துமே படத்துக்கான விளம்பரம் தானே என்பதால் விட்டுவிடுவேன். இப்போதைக்கு இறுதிகட்டப் பணிகளை முடிக்க வேண்டும். பல்வேறு நாடுகளில் படம் வெளியாக இருப்பதால், அதற்கான தணிக்கை பணிகள் அனைத்தையும் முடிக்க வேண்டும். பின்பு ஐமேக்ஸ் வெளியீட்டு பணிகளும் இருக்கிறது.

ஆகையால் டீசர், ட்ரெய்லர் உள்ளிட்ட எதற்கான பணியையும் நாங்கள் இன்னும் தொடங்கவில்லை. முதலில் வெளியீட்டிற்கான பணிகளை முடித்துவிட்டு, விளம்பரப்படுத்தும் பணிக்குள் வரலாம் என இருக்கிறோம். ஒன்று மட்டும் உறுதி. ஆகஸ்ட் 2-ம் தேதி ‘கூலி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகும். அதற்கு முன்பாக டீசர் உள்ளிட்டவை இருக்காது” என்று தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory