» சினிமா » செய்திகள்
கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்தின் இயக்குநர் அறிவிப்பு
சனி 3, ஜனவரி 2026 11:20:46 AM (IST)

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்கவிருக்கும் படத்தின் இயக்குநராக சிபி சக்கரவர்த்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்கவிருக்கும் தலைவர் 173 படத்தை சுந்தர்.சி இயக்குவதாக இருந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் வெளியேறிவிட்டார். சுந்தர் விலகியதை அடுத்து இந்தப் படத்தை யார் இயக்குவார் என்ற கேள்விதான் அனைவரிடமும் இருந்தது. இந்நிலையில் தலைவர் 173 பட இயக்குநர் பற்றிய அதிகார்பபூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
அதன்படி இப்படத்தை டான் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கவிருக்கிறார். 2022ஆம் ஆண்டு டான் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அப்போதே ரஜினியை சந்தித்து சிபி கதை சொல்லியிருந்தார். அந்தக் கதையைத்தான் இப்போது ரஜினியும், கமலும் தேர்வு செய்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. அடுத்த வருடம் பொங்கலுக்கு படம் ரிலீஸாகிறது.
இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கவிருப்பதாகவும் அறிவித்துள்ளனர். ரஜினியின் ஜெயிலர் 2 படத்துக்கும் அனிருத் தான் இசையமைத்து வருகிறார்.சிவகார்த்திகேயன் நடிப்பில் 2022-ல் வெளியாகிய டான் படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கியிருந்தார். இந்தப் படத்துக்கும் அனிருத் தான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இளையராஜா இசையில் பாடிய வேடன், அறிவு!
வெள்ளி 2, ஜனவரி 2026 12:23:18 PM (IST)

எல்லோரும் நல்லா இருப்போம்: ரசிகர்களுக்கு ஜன நாயகன் படக்குழு புத்தாண்டு வாழ்த்து!
வியாழன் 1, ஜனவரி 2026 12:09:53 PM (IST)

பருத்திவீரன் புகழ் கிராமிய பாடகி லட்சுமி அம்மாள் காலமானார்
புதன் 31, டிசம்பர் 2025 12:44:55 PM (IST)

2025-ல் அதிகம் வசூலித்த திரைப்படங்களில் துரந்தர் முதலிடம்!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 10:38:09 AM (IST)

கூட்ட நெரிசலில் பெண் பலி: அல்லு அர்ஜுன் உள்பட 23 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
சனி 27, டிசம்பர் 2025 5:38:00 PM (IST)

ஜெயிலர் 2 படத்தில் கேமியோ ரோலில் ஷாருக்கான்?
வியாழன் 25, டிசம்பர் 2025 5:01:21 PM (IST)

