» சினிமா » செய்திகள்
இயக்குநர் பாரதிராஜா உடல்நிலை குறித்து வதந்தி : மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்
திங்கள் 5, ஜனவரி 2026 4:42:39 PM (IST)
இயக்குநர் பாரதிராஜா குறித்து சமூக வலைதளங்கள் வாயிலாக வதந்தி பரவி வரும் நிலையில் அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
‘16 வயதினிலே’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா. தனது முதல் படத்திலேயே ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகளை வைத்து படம் இயக்கியவர். தொடர்ந்து பல படங்களை இயக்கிய பாரதிராஜா, ராதிகா, ராதா, கார்த்திக் உள்ளிட்ட பல முன்னணி நடிகர், நடிகைகளை அறிமுகம் செய்த பெருமையும் பெற்றவர். முதல் மரியாதை, கிழக்கே போகும் ரயில், அலைகள் ஓய்வதில்லை உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை அவர் இயக்கியுள்ளார்.பாரதிராஜாவின் ஒரே மகனும் நடிகரும் இயக்குனருமான மனோஜ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் திடீரென காலமானார். மகனின் மரணம் பாரதிராஜாவை மிகுந்த மனவேதனையில் ஆழ்த்தியது. இதனைத் தொடர்ந்து மலேசியாவில் உள்ள தனது மகள் வீட்டில் சில மாதங்கள் ஓய்வெடுத்து, சமீபத்தில் சென்னை திரும்பினார்.
பாரதிராஜா, உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் கடந்த மாதம் 27ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பாரதிராஜா குறித்து சமூக வலைதளங்கள் வாயிலாக வதந்தி பரவியது. இதனால், எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதில், "இயக்குநர் பாரதிராஜாவின் உடல்நிலை சீராக உள்ளது. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதால், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. டாக்டர்களின் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறார். டாக்டர்கள் குழு கண்காணிப்பில் உள்ளார்” என்று கூறப் பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜனநாயகன் படத்தை தியேட்டருக்கு சென்று பாருங்கள் : சிவகார்த்திகேயன் பேச்சு
திங்கள் 5, ஜனவரி 2026 4:21:40 PM (IST)

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்தின் இயக்குநர் அறிவிப்பு
சனி 3, ஜனவரி 2026 11:20:46 AM (IST)

இளையராஜா இசையில் பாடிய வேடன், அறிவு!
வெள்ளி 2, ஜனவரி 2026 12:23:18 PM (IST)

எல்லோரும் நல்லா இருப்போம்: ரசிகர்களுக்கு ஜன நாயகன் படக்குழு புத்தாண்டு வாழ்த்து!
வியாழன் 1, ஜனவரி 2026 12:09:53 PM (IST)

பருத்திவீரன் புகழ் கிராமிய பாடகி லட்சுமி அம்மாள் காலமானார்
புதன் 31, டிசம்பர் 2025 12:44:55 PM (IST)

2025-ல் அதிகம் வசூலித்த திரைப்படங்களில் துரந்தர் முதலிடம்!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 10:38:09 AM (IST)

