» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
மின் ரீடிங் குளறுபடிகள் தீரும் வரை கட்டணம் செலுத்த அவகாசம் வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
வெள்ளி 31, ஜூலை 2026 11:54:26 AM (IST)
தமிழகத்தில் மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் பணி சரியான முறையில் மேற்கொள்ளப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு வெளியிட்ட பதிவில், "3.70 லட்சம் குடும்பங்களுக்குக் கூடுதல் மின்கட்டணம் வசூலிக்கப்பட்டதை ஒப்புக்கொண்டு, தன் நிர்வாகத் திறமையின்மையை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது தவெக அரசு. ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே மக்கள் தலையில் அநியாயப் பொருளாதாரச் சுமையைச் சுமத்தியுள்ள இந்த மக்கள் விரோத அரசு இனியாவது திருந்தட்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.இதனை மேற்கோள் காட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: "3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாகப் புகாரளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பொதுமக்களின் குமுறலைப் பார்க்கும்போது, இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் பலமடங்கு இருக்கக்கூடும் என்பது உறுதியாகிறது.
இந்த மின் ரீடிங் குளறுபடிகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்பட்டுத் தீர்வு காணப்படும் வரை, பொதுமக்கள் மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். மேலும், இனிவரும் காலங்களில் மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் பணியைச் சரியான முறையில் மேற்கொள்வதை அரசு உறுதி செய்ய வேண்டும்." இவ்வாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு மருத்துவமனைகளில் குறைகளைக் களைய 50 அதிகாரிகள் நியமனம்: சுகாதாரத்துறை அதிரடி!
சனி 11, ஜூலை 2026 12:06:38 PM (IST)

தவெக அரசு தமிழகத்திற்கு நல்லது செய்தால் வரவேற்போம்: அண்ணாமலை விளக்கம்!
திங்கள் 6, ஜூலை 2026 5:17:54 PM (IST)

திமுக முக்கியப் பிரமுகர் திருமண விழாவில் உதயநிதி ஸ்டாலின் - சீமான் திடீர் சந்திப்பு!
திங்கள் 6, ஜூலை 2026 4:49:59 PM (IST)

தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் தொடர்வார்: வைகோ நம்பிக்கை - திமுக மீது கடும் விமர்சனம்!
செவ்வாய் 30, ஜூன் 2026 3:47:32 PM (IST)

தமிழகத்தின் வளர்ச்சிதான் முக்கியம்; மத்திய அரசுடன் மோதலை விரும்பவில்லை: முதல்வர் விஜய் திட்டவட்டம்
புதன் 24, ஜூன் 2026 11:44:30 AM (IST)

தவெக அரசின் தொலைநோக்குப் பார்வையை ஆளுநர் உரை வெளிப்படுத்தியுள்ளது: வைகோ புகழாரம்!
வியாழன் 18, ஜூன் 2026 3:32:37 PM (IST)


