» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
திமுகவில் கிளை முதல் மாவட்டம் வரை அதிரடி மாற்றங்கள்: செயற்குழுவில் 9 தீர்மானங்கள்!
சனி 22, ஆகஸ்ட் 2026 12:17:14 PM (IST)

திமுகவில் மாவட்டக் கழகங்கள் 110-ஆக அதிகரிப்பட்டுள்ளது. மாவட்டச் செயலாளராக ஒருவர் அதிகபட்சமாக 3 முறை மட்டுமே பதவி வகிக்க முடியும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தலைமைச் செயற்குழு கூட்டத்தில், திமுகவின் 16-ஆவது கழக அமைப்புத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் நிர்வாகக் கட்டமைப்பை மறுசீரமைக்கும் 9 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாக மறுசீரமைப்புக்கான 9 முக்கியத் தீர்மானங்கள்:
கிளைக் கழகச் செயலாளர்:
வயது வரம்பு: அதிகபட்சமாக 45 வயது என நிர்ணயிக்கப்படுகிறது.
பதவிக் காலம்: ஒருவர் அதிகபட்சமாக 2 முறை மட்டுமே அப்பொறுப்பில் நீடிக்க முடியும்.
மாநகரக் கிளைகள் உருவாக்கம்:
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாநகராட்சிப் பகுதிகளில் வட்டக் கழகங்களுக்குக் கீழ் 'கிளைக் கழகம்' என்ற புதிய பிரிவு உருவாக்கப்படுகிறது.
இதன் செயலாளருக்கும் அதிகபட்ச வயது வரம்பு 45 மற்றும் 2 முறை மட்டுமே பதவி வகிக்க முடியும்.
வட்டக் கழகங்கள் சீரமைப்பு:
சென்னை மாநகராட்சியில் சராசரியாக 10,000 வாக்காளர்களுக்கும், பிற மாநகரங்களில் 5,000 வாக்காளர்களுக்கும் ஒரு வட்டக் கழகம் அமைக்கப்படும்.
வட்டச் செயலாளரின் அதிகபட்ச வயது வரம்பு 50 ஆகும் (அதிகபட்சம் 2 முறை).
பேரூர்க் கழகச் செயலாளர்:
பேரூர்க் கழகச் செயலாளர்களின் அதிகபட்ச வயது வரம்பு 60 ஆக நிர்ணயிக்கப்படுகிறது (அதிகபட்சம் 2 முறை).
பகுதிக் கழகங்கள் சீரமைப்பு:
சென்னையில் 40,000 வாக்காளர்களுக்கும், பிற மாநகரங்களில் 30,000 வாக்காளர்களுக்கும் ஒரு பகுதிக் கழகம் உருவாக்கப்படும்.
பகுதிச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 ஆகும் (அதிகபட்சம் 2 முறை).
நகரக் கழகங்கள் சீரமைப்பு:
சராசரியாக 40,000 வாக்காளர்களை உள்ளடக்கி ஒரு நகரக் கழகம் அமைக்கப்படும்.
நகரச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 (அதிகபட்சம் 2 முறை).
ஒன்றியக் கழகங்கள் சீரமைப்பு:
சராசரியாக 30,000 வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றியக் கழகம் உருவாக்கப்படும்.
எந்தவொரு ஊராட்சியும் இரண்டாகப் பிரிக்கப்படக் கூடாது; ஒரு ஒன்றியம் ஒரே சட்டமன்றத் தொகுதிக்குள் மட்டுமே அமைய வேண்டும்.
ஒன்றியச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 (அதிகபட்சம் 2 முறை).
மாவட்டக் கழகங்கள் 110-ஆக அதிகரிப்பு:
வருவாய் மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு கழக மாவட்டம் என்ற அடிப்படையில் மறுசீரமைக்கப்படும்.
இதன்படி தற்போதிருக்கும் 77 கழக மாவட்டங்கள் 110-ஆக அதிகரிக்கப்படும். இதனால் 'மாநகரச் செயலாளர்' பொறுப்பு இனி தேவையில்லை எனக் கருதப்படுக்கிறது.
மாவட்டச் செயலாளரின் அதிகபட்ச வயது வரம்பு 70 என நிர்ணயிக்கப்படுவதுடன், ஒருவர் அதிகபட்சமாக 3 முறை மட்டுமே பதவி வகிக்க முடியும்.
அமைப்புகளை உருவாக்கும் காலவரையறை:
புதிய 110 கழக மாவட்டங்களை திமுக தலைவர் அறிவித்த பிறகு, 15 நாட்களுக்குள் அனைத்துக் கீழ்நிலை அமைப்புகளும் உருவாக்கப்பட்டுத் தலைமைக் கழகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட வேண்டும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாட்டு மக்களுக்காக அவமானத்தையும் தாங்க நான் தயார்: முதலமைச்சர் விஜய்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 10:42:14 AM (IST)

மின் ரீடிங் குளறுபடிகள் தீரும் வரை கட்டணம் செலுத்த அவகாசம் வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
வெள்ளி 31, ஜூலை 2026 11:54:26 AM (IST)

அரசு மருத்துவமனைகளில் குறைகளைக் களைய 50 அதிகாரிகள் நியமனம்: சுகாதாரத்துறை அதிரடி!
சனி 11, ஜூலை 2026 12:06:38 PM (IST)

தவெக அரசு தமிழகத்திற்கு நல்லது செய்தால் வரவேற்போம்: அண்ணாமலை விளக்கம்!
திங்கள் 6, ஜூலை 2026 5:17:54 PM (IST)

திமுக முக்கியப் பிரமுகர் திருமண விழாவில் உதயநிதி ஸ்டாலின் - சீமான் திடீர் சந்திப்பு!
திங்கள் 6, ஜூலை 2026 4:49:59 PM (IST)

தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் தொடர்வார்: வைகோ நம்பிக்கை - திமுக மீது கடும் விமர்சனம்!
செவ்வாய் 30, ஜூன் 2026 3:47:32 PM (IST)


