» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
வியாழன் 1, ஆகஸ்ட் 2024 5:16:33 PM (IST)
பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழ்நாட்டில் அருந்ததியருக்கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீட்டிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது அரசியல் சட்டத்தின் 14வது பிரிவை உள் ஒதுக்கீடு மீறவில்லை. பட்டியலின உட்பிரிவுகள் எதுவும் 'பட்டியல் வகுப்பினர்' என்ற வரையறையில் இருந்து விலக்கப்படாத காரணத்தால் உள் ஒதுக்கீடு வழங்கலாம் என்றும் பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என்றும் 7 நீதிபதிகள் அமர்வில் 6 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பு வழங்கினர். நீதிபதி பேலா திரிவேதி மட்டும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினார்.
பட்டியலின, பழங்குடியினருக்கான உள்ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்க முடியும் என்று அருந்ததியர் உள் இடஒதுக்கீடு தொடர்பான தமிழக அரசின் சட்டம் செல்லும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் அரசு வேலைவாய்ப்புகளில் பட்டியலின பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் வால்மீகி மற்றும் மழாபி சீக்கிய சமூகத்தினருக்கு 50% உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் விதமாக பஞ்சாப் மாநில அரசு கொண்டு வந்த சட்டமும் செல்லும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பனிச்சறுக்கு விபத்து: வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் மகன் மரணம்!
வியாழன் 8, ஜனவரி 2026 10:19:38 AM (IST)

பயங்கரவாதத்திற்கு எதிராக போராட உறுதி : இஸ்ரேல் பிரதமருடன் மோடி பேச்சு!
புதன் 7, ஜனவரி 2026 5:21:12 PM (IST)

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா மருத்துவமனையில் அனுமதி
செவ்வாய் 6, ஜனவரி 2026 4:56:38 PM (IST)

சாகர் தீவை இணைக்க ரூ.1,670 கோடி செலவில் பாலம்: மம்தா பானர்ஜி அடிக்கல் நாட்டினார்
செவ்வாய் 6, ஜனவரி 2026 11:51:15 AM (IST)

சட்டவிரோத தகவல், படங்கள் பதிவிட்டால் தடை: பயனர்களுக்கு எக்ஸ் தளம் எச்சரிக்கை
திங்கள் 5, ஜனவரி 2026 12:11:59 PM (IST)

பெண்களின் ஆபாச ஏஐ வீடியோ, படங்களை நீக்க வேண்டும்: எக்ஸ் தளத்துக்கு மத்திய அரசு கெடு!
சனி 3, ஜனவரி 2026 3:37:12 PM (IST)

