» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ரூ.2000 வரையிலான பரிவர்த்தனைக்கு 18% வரி இல்லை: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு
திங்கள் 9, செப்டம்பர் 2024 4:18:36 PM (IST)
ரூ.2000 வரையிலான பரிவர்த்தனைக்கு 18% வரி இல்லை என்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

நமது நாட்டில் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்ட பிறகு தொடர்ந்து ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று 54-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், இந்தக் கூட்டம் கூடியது.
இதில், கோவா மற்றும் மேகாலயா மாநிலங்களின் துணை முதல்வர்களும், பீகார், மத்தியப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் நிதியமைச்சர்களும், மத்திய மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
குறிப்பாக சில முடிவுகள் மக்களின் வரிச்சுமையை குறைக்கும் வகையில் இருக்கலாம் எனவும், அதேவேளையில் சில முடிவுகள் கூடுதல் வரிச்சுமையை ஏற்படுத்தலாம் எனவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இதேபோன்று ஆயுள் காப்பீட்டு பாலிசிகள் பிரீமியத்தின் மீதான ஜிஎஸ்டி ரத்து செய்வது குறித்து ஆலோசிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டும் இன்றி முக்கியமாக ரூ.2 ஆயிரம் வரையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு 18 சதவிகிதம் வரி விதிக்கப்படுவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்த கூட்டத்தில் மக்களுக்கு நிம்மதி கொடுக்கும் வகையிலான அறிவுப்புகளே வெளியாகின. அதாவது ரூ.2000 வரையிலான பரிவர்த்தனைக்கு இப்போதைக்கு 18% வரி இல்லை என்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ரூ.2000 வரையிலான டிஜிட்டல் பரிவர்த்தணைக்கு 18% வரிவிதிக்க வேண்டும் என்ற முன்மொழிவு குறித்து மேலும் விரிவாக ஆலோசிக்க வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் பிட்பமண்ட் ( fitment) கமிட்டிக்கு அனுப்ப முடிவு செய்துள்ளார்.
இதேபோல் மத கரணங்களுக்காக இயக்கப்படும் ஹெலிகாப்டர்களுக்கு ஜிஎஸ்டி 18 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல, மருத்துவக் காப்பீடு தவணைக் கட்டணம் மீதான ஜிஎஸ்டியை குறைத்தல் அல்லது அந்த ஜிஎஸ்டியை செலுத்துவதில் இருந்து மூத்த குடிமக்கள் போன்றவா்களுக்கு விலக்களிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

துணைவேந்தர் நியமன வழக்கு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!!
சனி 5, ஜூலை 2025 5:29:02 PM (IST)

இந்தி திணிப்புக்கு எதிராக 20 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த தாக்கரே சகோதரர்கள்!
சனி 5, ஜூலை 2025 3:58:09 PM (IST)

தாறுமாறாக வாகனம் ஓட்டி இறப்பவரின் குடும்பத்துக்கு இழப்பீடு இல்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 4, ஜூலை 2025 11:22:46 AM (IST)

மோடி அரசு, விவசாயிகளைக் கொன்று வருகிறது : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
வியாழன் 3, ஜூலை 2025 5:55:07 PM (IST)

நானே 5 ஆண்டுகளும் முதல்வராக இருப்பேன்: சித்தராமையா திட்டவட்டம்!
புதன் 2, ஜூலை 2025 5:32:08 PM (IST)

முகம்மது ஷமி முன்னாள் மனைவிக்கு மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு
புதன் 2, ஜூலை 2025 11:49:25 AM (IST)
