» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் 370 சட்டப்பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது: பிரதமர் மோடி

சனி 9, நவம்பர் 2024 10:34:43 AM (IST)

ஜம்மு-காஷ்மீரில் எந்த சக்தியாலும் 370 சட்டப்பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது என்று பிரதமர் மோடி பேசினார். 

பிரதமர் மோடி மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ள தேசிய மாநாடு கட்சி, சட்டமன்றத்தில் மீண்டும் சட்டப்பிரிவு 370-ஐ கொண்டு வரும் வகையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியின் சதியை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது: மகாராஷ்டிரா (மகாராஷ்டிரா மாநில மக்கள்) ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் செய்த சதிகளை புரிந்து கொள்ள வேண்டும். நாடு சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளாது. மோடி இங்கு இருக்கும் வரை, காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியால் ஏதும் செய்ய இயலாது. அம்பேக்தரின் அரசியலமைப்பு மட்டுமே அங்கு செயல்படும். சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வர எந்த சக்தியாலும் முடியாது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

மேலும், "காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானுக்கான திட்டத்தை (agenda) இங்கு முன்வைக்க வேண்டாம். காஷ்மீருக்காக பிரிவினைவாத மொழிகளை பேச வேண்டாம்" என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory